28/04/2026
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், பொதுவாக நாம் பயன்படுத்தும் mobile phone எப்போது பழுதாகும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று ஆகையால் அது தொடர்பான ஒரு தகவல். பெரும்பாலான நண்பர்கள் தங்களது செல்போனை பழுது நீக்க வரும்பொழுது இதில் முக்கியமான டேட்டாக்கள் புகைப்படங்கள் இருக்கின்றன அதை எப்படியாவது எடுத்து தர முடியுமா என்று கேட்பார்கள் சில நேரங்களில் சாத்தியப்படும் பல நேரங்களில் அது போன்ற எடுக்க முடியாத சூழல் உருவாகும் ஆகையால் நாம் முன்கூட்டியே சில விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது குறிப்பாக நம்முடைய மொபைல் போனில் உள்ள போட்டோ வீடியோ மற்றும் டாக்குமெண்ட்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறு ஏதாவது ஒரு டிவைஸ் இல் சேமித்து வைப்பது மிகச் சிறந்தது ஆகையால் அனைவரும் இதுபோன்று முயற்சி செய்யவும்.அதுமட்டுமல்லாமல் முக்கிய ஆவணங்களை உடனடியாக print எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் மூலம் உங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் நன்றி