19/10/2021
ஹரியானாவை தலைமையிடமாக கொண்ட Zomato நிறுவனம் பெங்களூருக்கு பிறகு தமிழகத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் தனது சேவையை தொடங்கியது,, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அல்லவா!!! வாழவைத்தது... பிற மாநிலங்களை விட நல்ல வரவேற்பு, உணவக உரிமையாளரில் தொடங்கி வேலையில்லா பட்டதாரிகள் வரை Zomato வை சபையேற்றி விட்டனர்.
Zomato நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் 100 க்கு 75% பேர் படித்த பட்டதாரிகளே, தொடக்கத்தில் ₹25000 பகுதிநேர விநியோகிப்பாளருக்கு
,முழுநேர விநியோகிப்பாளருக்கு ₹45000
, மழைக்கால கூடுதல் தொகை, காத்திருப்பு தொகை என்று வழங்கிவிட்டு, மக்களுக்கு அத்தியாவசியமாக இச்சேவை மாறிவிட்ட பிறகு விநியோகிப்பாளருக்கான சலுகைகளை குறைத்தது இந்த திறுவனம்,
ஒரு வருடத்திற்கு முன்பு நம் தமிழக இளைஞர்கள் Zomato வில் உணவு விநியோகம் செய்பவர்கள் போராட்டங்களை நடத்தினார்கள் நியாபகம் இருக்கிறதா???
பேச்சுவார்த்தைக்குக்கூட ஒருவரும் வரவில்லை மாறாக போராட்டம் நடத்தியவர்களை பணியைவிட்டு அனுப்பியது இந்நிறுவனம் , போராட்டத்தில் #ஈடுபடாதவர்களுக்கு கூடுதல் ஊக்க தொகை வழங்கியது..
வாடிக்கையாளர் மட்டுமல்ல, விநியோகிப்பாளர், உணவக உரிமையாளர்கள் என்று யவரும் எளிதாக நிறுவனத்தை அனுக முடியாது..
தமிழகத்தில் தொழிலை தொடங்கிய நிறுவனம்,,, அந்நிறுவனம்தான் தமிழ் தெரிந்த வாடிக்கையாளர் சேவை அதிகாரியை நியமித்திருக்க வேண்டுமே தவிற இந்தி தேசிய மொழி அதை ஓரளவுக்காவது தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது ஒரு வகை தினிப்பு தான்..
உணவகங்களுக்கு அதிமான வாடிக்கையாளர்களை கொடுத்த பிறகு அவர்களுக்கும் 8% த்திலிருந்து 24% மாக கமிசன் தொகையை உயர்த்தியது,
உணவகங்களும் கேள்வி கேட்க முடியாத நிலை...
இவர்களுக்கு பிரச்சனை என்ன தெரியுமா!!
தமிழன்னாலே கேள்வி கேப்பான் அவ்வளவுதான்...
மொழியை வைத்து விளம்பரம் தேடுகிறது Zomato
பல மாநிலங்களில் நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனம் தமிழகத்தில் நல்லமுறையில் இயங்க காரணமே நமது இளைஞர்கள் தான்....
உணவு விநியோக சேவையை தொடங்குவது, தொடக்கத்தில் சிரமமான வேலையாக இருந்தாலும் மக்களின் தேவையும் அதற்கான வெகுமதியும் உயர்வதால் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நம்மாளும் நிறுவனத்தை எளிதாக நடத்த முடியும், நம் மக்களோடு நமது மொழியில் பேசுகிறோம், பதில் தருகிறோம் இதை விட வேறு என்ன வேண்டும்...
தமிழக தயாரிப்புகளுக்கு ஆதரவு தாருங்கள் வேலையை தேடாமல் உருவாக்குங்கள்...
🛵... PKT ஹோம் CALL டெலிவரி ... 🛵