Timber Merchants & Saw Mill Owners Association, Namakkal

Timber Merchants & Saw Mill Owners Association, Namakkal Jayakumar Vellaiyan
President

P Veerakumar
Vice President

Madhanlal Patel
Secretary

Kanthilal Patel
Treasurer

The objectives for which the Namakkal Taluk TMSMOA is established are:

- To promote the development of Timber Small Scale Industries, Timber Trade and Saw Mills, to provide facilities for exchange of information and opinion of interest of Timber Small Scale Industries,Timber Trade and Saw Mills.

- To organize common service facilities for its members

11/04/2024
💐❤️
16/12/2023

💐❤️

 #மிக்ஜாம்_புயல் - நிவாரண பொருட்கள் வழங்கிய மர வியாபாரிகள்!மிக்ஜாம் புயல் காரணமாக, தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாதிக்...
10/12/2023

#மிக்ஜாம்_புயல் - நிவாரண பொருட்கள் வழங்கிய மர வியாபாரிகள்!

மிக்ஜாம் புயல் காரணமாக, தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பல்வேறு இணைப்பு சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

நாமக்கல் மர வியாபாரிகள் & அறுவை ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை, நாமக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ரேஞ்சர் பெருமாள், சக்தி கணேஷ் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் நேற்று 09/12/2023 மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார்.

நிகழ்வில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், இணை செயலாளர் தேவி உதயகுமார், இளைஞர் அணி அமைப்பாளர் மரக்கடை அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 #ஆலோசனை_கூட்டம்!நாமக்கல் தாலுகா மர வியாபாரிகள் & அறுவை ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று (01/12/2023) ...
01/12/2023

#ஆலோசனை_கூட்டம்!
நாமக்கல் தாலுகா மர வியாபாரிகள் & அறுவை ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று (01/12/2023) மாலை 7 மணியளவில், பரமத்தி சாலை, குமார் இல்லம் 3ம் தளத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வீரக்குமார், செயலாளர் மதன்லால் பட்டேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய சங்க தலைவரும், அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான ஜெயகுமார் வெள்ளையன், மாவட்ட வனத்துறை அலுவலரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மர அறுவை ஆலை உரிமையாளர்களும் மரம் இருப்பு குறித்த பதிவேட்டினை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், உள்நாட்டு தேக்கு மரம் விற்பனை செய்வோர் அதற்கான இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், அறுவை ஆலைகளை ஆய்வு செய்ய வரும் வன அலுவலர்களுக்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், மர அறுவை ஆலை உரிமத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்த விண்ணப்பங்களை அரசு விரைந்து பரிசீலித்து உரிமம் வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கூட்ட நிறைவில் சங்க பொருளாளர் காந்திலால் பட்டேல் நன்றி கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்

உள்ளங்களில் அன்பு ஒளிரட்டும்!இல்லங்களில் இன்பம் பெருகட்டும்!❤️ இன்ப தீபாவளி வாழ்த்துக்கள்!
03/11/2021

உள்ளங்களில் அன்பு ஒளிரட்டும்!
இல்லங்களில் இன்பம் பெருகட்டும்!

❤️ இன்ப தீபாவளி வாழ்த்துக்கள்!

🙏🏼❤️🙏🏼
21/04/2020

🙏🏼❤️🙏🏼

 #நிவாரண_பொருட்கள்கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வரும் வேளையில், ‘குட்ச் ...
13/04/2020

#நிவாரண_பொருட்கள்
கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வரும் வேளையில், ‘குட்ச் கடவா படிதார் நாமக்கல் சனாதன் சமாஜ்’ சார்பாக திரு.மதன்லால் பட்டேல் மற்றும் திரு.ஹரிலால் பட்டேல் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்டோர்களுக்கு வழங்குவதற்கான ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான உணவுப்பொருட்களை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.துர்கா மூர்த்தி அவர்களிடம் இன்று (13/04/2020) வழங்கினர். வருவாய் கோட்டாட்சியர் திரு.கோட்டைகுமார் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் திரு.ஜெயகுமார் வெள்ளையன் ஆகியோர் உடனிருந்தனர்.

Address

Namakkal
637001

Telephone

+919843798438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Timber Merchants & Saw Mill Owners Association, Namakkal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Timber Merchants & Saw Mill Owners Association, Namakkal:

Share