பசுமை சேவகன்

பசுமை சேவகன் இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஆத்மார்தமான முயற்சி, வாருங்கள் இணைவோம்

* இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்துதல்

* விவசாயிகள் விளைவிக்கும் இயற்கை வேளாண் விளை பொருட்களை நியாயமான விலையில் விற்பணை செய்ய ஏற்பாடு செய்தல்

* ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாய குழுக்கள் மற்றும் தகவல் மையங்களை உருவாக்குதல்

* மக்களிடையே இயற்கை வேளாண் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

* நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி க

ொடுத்து வீட்டுத்தோட்டம் அமைக்க உதவுதல்

* மக்களிடையே ஆண்டிற்கு ஒரு மாதமேனும் தாங்கள் விளைவித்த காய்கறிகளை உண்ண ஊக்கப்படுத்துதல்

* நமது பாரம்பரிய மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவைகளின் பயன்பாட்டை அதிகரித்தல்

* நமது புவியை பசுமையாக்க, நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்

* பிராண வாயுவான ஆக்ஸிஜனை அதிகரிக்க, ஒவ்வொரு மனிதனும் ஆண்டிற்கு ஒரு மரமேனும் நட்டு, பராமரித்து வளர்க்க ஊக்கப்படுத்துதல்

* தனிநபர், அரசு நிலங்களிலும் மற்றும் வளாகங்களிலும் மரங்களை நட்டு வளர்க்க ஊக்கப்படுத்துதல் மற்றும் உதவுதல்

* பள்ளிகள், கல்லூரிகளில் இயற்கை வேளாண்மை, மரங்களின் முக்கியத்துவம், மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இவைகள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

* கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உதவுதல்

23/12/2018

மஞ்சள் கால் பிரியும் நேரமே கார்த்திகைதான்ங்க..
நீங்க வைகாசியில மஞ்சள் நடவினாலும் சரி,
ஆவணியல நடவினாலும்
கிழங்கு பிரியும் காலம் இதுதான்..

நாங்க வைகாசி கடைசியில் நடவு
செய்து முழுசா பத்து மாதம் நிறைவடைந்த பின்பே
அதாவது பங்குனி மாதம்தான் அறுவடையே செய்வோம்..

நிறையாபேர் விலை இறங்கிடும் அதுக்குள்ளே தோண்டி விற்றுவிடனும்னு
எட்டு ஒன்பதாவது மாதத்துலேயே குறை பிரசவத்திலேயே தோண்டிடுவாங்க..
அப்படி செய்ய கூடாது.

ஏன்னா நிறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் எப்படி வேறுபடுதோ அதேதான் நம்ம பயிரிலும் நடக்கும்..

இன்னும் சில பேர் "பசு மஞ்சள் "இப்போ உங்களிடம் கிடைக்குமானு கேட்குறாங்க..

முதலில் பசு மஞ்சள்னா என்னானு தெரிஞ்சுக்குவோம்..

தை பொங்கலுக்கு
கல் அடுப்புகூட்டி,
அதில் வாகை விறகு வச்சு,
தீமூட்டி,
மண்பானையில் அரிசி போட்டு,
பானையை சுற்றி
எட்டு மாதமான மஞ்சளை தாளுடன்
பிடிங்கு வந்து
பொங்கப்பானையை சுற்றி கட்டிவிட்டு,
பொங்கல் வைத்து
பொங்கியவுடன் இறக்கி வைத்து,
பானையை சுற்றி கட்டியிருந்த எட்டு மாத மஞ்சளை அப்படியே சாப்பிடும் போது
அதில் மருத்துவகுணம் இருப்பதாக சொல்றாங்க..

அதுதான் பசுமஞ்சள்..

காலப்போக்கில் இந்த முறை மருவி,
பசு மஞ்சள்னா அறுவடையின் போது கிடைக்கும் மஞ்சள்னு நிறையபேருக்கு தவறான புரிதல் இருக்கு..

அதுக்காக பத்து மாதங்கள் முடிந்து அறுவடை செய்யும் மஞ்சளுக்கு மருத்துவகுணங்கள் இருக்காதா னு நினைக்க கூடாது..

நச்சில் குளிப்பாட்டாதா எந்த மஞ்சளையும் அப்படியே சாப்பிடலாம்.
புற்று போன்ற செல்களை அழிக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருக்கு..

சரி அப்போ எதுக்கு விறகு அடுப்பில் பொங்கல் வைக்கனும்னு சொல்றாங்கனா,
வாகை மரத்து பட்டையில் பொங்கல் வைத்து
தீ மூட்டும் போது
அந்த சாம்பல் பொங்கலில் விழுந்து
அதை நாம் உண்ணும் போது அதிலும் மருத்துவ குணம் நிறைந்து இருக்காம்..

ஆனா இதே எரிவாயு அடுப்பில் சமைத்தால் கிடைக்குமா..??
கிடைக்கவே கிடைக்காதுங்க..

அவசர உலகில் முழுசா நம்மால
இயற்கை பக்கம் திரும்ப முடியலைனாலும்
கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்கிட்டாலே
இயற்கை நம்மை தன் பக்கம் அழைத்துக்கொண்டு போகும் என்பதுதான் நிதர்சனம்..

நன்றி Thiru Murthy அவர்கள்
நல்லதை பகிர்வோம்
வாழ்க வளமுடன்...

சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் சேவை அளப்பரியது.எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு விக்கிவாழ்க வளமுடன்...
18/12/2018

சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் சேவை அளப்பரியது.
எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு விக்கி
வாழ்க வளமுடன்...

Instagram : http://instagram.com/tamilpokkisham/ Facebook : http://facebook.com/iamPokkisham/ Email : [email protected] தினமும் உங்கள் 10 நிமிடம் எனக்...

16/12/2018

அறுவடை முடிந்தவுடனே வியாபாரிக்கு மஞ்சளை விற்க்கும் போது கஷ்டம் தெரியல..
அதையே பொடியாக்கி நேரடியா சந்தைபடுத்தும் போது பெரும் கஷ்டமா இருந்துச்சு..

போட்டவுடனே அப்படியே எண்ணி தேங்காயை விற்கும் போது கஷ்டம் தெரியல..
அதையே உடச்சு காயவச்சு எண்ணெய் ஆட்டி விற்கும் போது பெரும்கஷ்டமா இருந்துச்சு..

தேங்காய் எண்ணெயா கொடுக்கும் போது கூட பெரிய கஷ்டமாயில்ல..
ஆனா அதே எண்ணெயை வச்சு
குளியல் சோப்பா சந்தைபடுத்தும் போது பெரும் சவாலா இருந்துச்சு..

வாழை நடவி இயற்கையில் விளைய வச்சு உள்ளூர் காரருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கும் போது கஷ்டமாயில்ல..
அதையே பெட்டியில் அடச்சு பத்து நாளுக்கு ஒருமுறைனு நுகர்வோருக்கு நேரடியா கொண்டு சேர்க்கும் முயற்சி யில் ஈடுபடும்போது போது ரொம்பவுமே சோர்வாகிட்டோம்..

எல்லா வாழைக்காயையயும் நேரடியா சந்தைபடுத்த முடியலைனு புது முயற்சியா கற்பூரவள்ளி சிப்ஸ் போட்டு கொடுத்துடலாம்னு முடிவு செஞ்சு ஒரு பதிவு போட்டேன்..
மூனே நாளில் நாற்பது கிலோ சிப்ஸ்க்கு பணத்தை கட்டீட்டாங்க..

சரி ஆளை பிடிச்சு சிப்ஸ் போட்டுவிடலாம்னு தேடும் போது
தோட்ட வேலைக்கு கூட ஆள் கிடச்சிடும் போல சிப்ஸ் போட ஆள் கிடைப்பது குதிரை கொம்பா போச்சு..

கஷ்டபட்டு கடைசியில் ஒரு தேசிய"குடிமகன்"ஒருவரை பிடிச்சு கொண்டு வந்து அறுபது கிலோ கற்பூரவள்ளி வாழை காயை தோல் உரிச்சு சிப்ஸ் போட உதவி செய்தா
ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் தோட்டத்துக்குள்ளே போய் அவர் ஏற்கவே கொண்டுவந்த சோமபானத்தில் ஒவ்வொரு கட்டிங் வச்சுட்டு வந்து அடுப்படியில் உட்கார்கிறாரு..

நாலு மணி நேரத்தில் அஞ்சு கிலோ சிப்ஸ் போட்டு கொடுத்துட்டு
"நா கரளியம் வரைக்கும் போயிட்டு வரனும் உரிச்ச வாழைகாயை தண்ணியில போட்டு வையுங்க நான் போயிட்டு நைட் வந்து மீதி சிப்ஸ்ஸை போட்டு தர்ரேனு "கிளம்பிட்டாப்ல..

பத்து லிட்டர் தேங்காய் எண்ணெயையயும் ஊத்தியாச்சு..
இன்னும் பத்து கிலோ சீப்ஸ் போடுகிற அளவுக்கு வாழைகாயும் இருக்கு.
குடிகாரன் பேச்சு விடிவதற்கு முன்பே போச்சுனு துணைவி, மகன், அம்மா, வேலைக்கு வர்ர சசினு நாங்க நாலு பேரும் நாலு மணிநேரத்தில் மிச்ச இருந்த காயை சிப்ஸ் ஆக்கிட்டோம்..

கணக்கு போட்டு பார்த்தா அசலே கிலோ நாநூறு ரூபாயை தாண்டுது..
சரி கடைக்காரங்க எப்படி அந்த விலைக்கு கொடுக்கறாங்கனு பார்த்தா அவுங்க பயன்படுத்துவது 70 % பாமாயில் தானாம்..!!

சரி லாபமமோ நட்டமோ என்பதைவிட இதில் ஒரு பாடம் படிச்சுட்டோனு ஒரு சிறு அனுவபத்தோட அடுத்த நாள் மாலை ஆறு மணிக்கு நாங்க நாலு பேருமே உட்காந்து இரவு ரெண்டு மணிக்கு 20 கிலோ சிப்ஸை போட்டு அடுத்த நாள் காலையே உட்காந்து பேக் செஞ்சு பார்சலும் அனுப்பியாச்சு..

உண்மையை சொல்லனும்னா
இந்த ஆறு வருஷத்துத்ல நேரடி சந்தை படுத்த நாங்க பட்ட கஷ்டத்துலேயே பெரும் கஷ்டம் இந்த சிப்ஸ் போட்டதுதாங்க..

ஆள் அதிகமா தேவை என்பதைவிட
இந்த வேலைக்கு ஆட்கள் சரியா கிடைப்பதில்லை என்பதுதான் வேதனையே..
அதனால சிப்ஸ் விசயத்தை தற்காலிகமா நிறுத்திட்டு இருக்கிற வாழை பழங்களை அனுப்பிடலாம்னு முடிவு செஞ்சுட்டோம்..

அக்டோபர் 1 ஆம் தேதி நேரடியா இல்லங்களுக்கு 2 கிலோ செவ்வாழை,
2 கிலோ கற்பூரவள்ளியை பத்து நாளுக்கு ஒருமுறை நான்கு கிலோ வீதம் தொடர்ந்து மூன்று மாதங்கள் அனுப்புகிறோம்னு முகநூலில் பதிவு போட்டவுடனே நிறையாபேர் முன்பணம் செலுத்தினாலும் இது புது முயற்சி இவரால எப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் பழங்கள் அனுப்பமுடியும்னு முன்பதிவு செய்யாத ஒருசிலருக்கு சந்தேகம் வந்தது.

அழைபேசியிலும் என்னை கேட்டாங்க..
முடியும்னு நானும் சொன்னேன்..

அதே மாதிரி போனவாரத்தோட
பெரும்பாலானவங்களுக்கு 9 ல் 8 பார்சல் அனுப்பியாச்சு..
இந்த வாரம் அனுப்பினால் முடிந்தது..

இது எப்படி சாத்தியம்னா
இயற்கை வழி வேளாண்மையினால்தானு சொல்லுவேன்.

ஏன்னா இதே செவ்வாழை நாற்றை நாற்று பண்ணையில் வாங்கி நடவி
நச்சை கொட்டியிருந்தா மூன்றே
அறுவடையில் காடு காலி ஆகியிருக்கும்..

ஆனா நம்ம வேளாண்முறையில் அப்படியில்ல..
தன்போக்கில் விட்டு அறுவடை செஞ்சோம்.

ஆயிரம் வாழையில் இதுவரை 600 வாழைதான் அறுவடையே ஆகியிருக்கு.

இன்னும் 400 வாழை அறுவடையாகும் போது முதலில் அறுவடையான கட்டை வாழை அறுவடைக்கு வந்திடும்..

அதனால இந்த முறை இடைவெளி இல்லாம தொடர்ந்து இன்னும்
நான்கு முறைக்கு மேல இதே போல செவ்வாழை 2 கிலோ, கற்பூரவள்ளி 2 கிலோ வீதம் பத்து நாட்களுக்கு ஒருமுறை இன்னும் நான்கு ஐந்து பார்சல்கள் அனுப்பலாம்..

தேவைபடுபவர்கள் 80×4=320
320×5=1,600 ₹ ஆக 1,600 ரூபாயை முன்கூட்டியே செலுத்துனீங்கனா கூரியரில் பழங்களை அனுப்புகிறோம்..(கூரியர் கட்டணம் உட்பட )
குறைந்தது நான்கு கிலோதான் அனுப்பமுடியும்..

ஒருமுறை மட்டும் போதும்னு நினைப்பவர்கள் 320 ₹ மட்டும் கீழ்கண்ட வங்கி கணக்கில் தொகை செலுத்திவிட்டு தகவல் கொடுங்க..

வங்கி விபரம்..

Name :Thirumurthi.S

Bank Name :Bank of Baroda,

Branch :Sathyamangalam

Account type :Current account

Current Acc number :450 102 00 000 125

IFSC code :BARB0SATHYA
👆இது பூஜியம், zero
ஓ (O)அல்ல..

MICRCode :638012402

நேரடியாக எனது வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவதை தவிர்க்கவும்..(ஒரு முறை பணம் செலுத்தினால் 50 முதல் 150 ரூபாய் வ கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறது வங்கி) (

NEFT மற்றும் Mobile banking மூலம் மட்டுமே பணம் செலுத்தவும்..
ல் #கட்டாயம் உங்கள் பெயரை குறிப்பிடவும்..

தயவுசெய்து ல் உங்கள் பெயரை குறிப்பிட்டால் மட்டுமே பார்சல் அனுப்ப எங்களுக்கு சுலபமாக இருக்கும்..

பணம் செலுத்திய பின்
பணம் செலுத்தியதற்க்கான IMPS Reference எண்ணை,
89034 69996 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் முகவரியுடன் தொடர்பு எண்ணையும் சேர்த்து அனுப்பவும்..

மேலும் விபரங்களுக்கு

89034 69996
👆👆(வாட்ஸ்அப்+உள் வரும் அழைப்புக்கள்)

89038 69996
👆👆(உள் வரும் அழைப்புக்கு மட்டும்..)

"128 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தும்,
நஷ்டத்தில் இயங்கும் ஒரே தொழில் விவசாயம் மட்டுமே" என்ற நிலையை மாற்றத்தான் இந்த முயற்சிங்க..

நன்றி அண்ணன் அவர்களுக்கு...
வாழ்க வளமுடன்...

14/12/2018

நில அளவுகள் அறிவோம்.

♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 பேர்ச் - 272 சதுரஅடி
♓1 ஏக்கர் - 160 பேர்ச்
♓1 செ.மீ – 100 மி.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

நன்றி..
வாழ்க வளமுடன்...

14/10/2018

ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது,. வற்ற விடாது. அந்த பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு
பாலைவனமாக மாறி கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்.
- நம்மாழ்வார்.

அப்படிப்பட்ட பனை மரத்தை நாம் காக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் பனை நடவு செய்ய தன்னார்வலர்கள் தேவை.

25/09/2018

50 ஆண்டுகளாக பாழ்பட்ட நிலத்தை வேளாண்முறைக்கு மீட்டெடுக்கும் மந்திரத்தை எங்கள் பெருந்தகையன் நம்மாழ்வார் ஓதுகிறார்.

20 வகையான விதைகள் தேவை.
தானியம் 4 வகை
பருப்பு 4 வகை
எண்ணெய்வித்து 4 வகை
வாசனைப்பொருள் 4 வகை
உரச்செடிகள் 4 வகை
தானியம் வகைகள் : சோளம், கம்பு, சாமை, தினை, கேழ்வரகு.
பருப்பு வகைகள் : உளுந்துப்பயறு, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொள்ளுப்பயறு, துவரை, அவரை, மொச்சை. (ஏதேனும் நான்கு)
எண்ணெய்வித்துகள் : எள்ளு, ஆமணக்கு, சூரியகாந்தி, நிலக்கடலை, சோயா மொச்சை.
வாசனை வித்துகள் : கடுகு, சோம்பு, வெந்தயம், மல்லி.
உரச்செடிகள் : தக்கப்பூண்டு, அகத்தி, சணப்பை, செம்பை, நரிப்பயறு.
இந்த வகைகளில் நான்கு நான்காகத் தேர்ந்தெடுத்து மொத்தம் 20 வகைகளை ஏக்கர்க்கு 25 கிலோ கணக்கில் எடுத்து சிறியவிதைகளை, நடுத்தரவிதைகளை, பெரிய விதைகளை எனத் தனித்தனியாக கலந்துகொண்டு பாழ்பட்ட நிலத்தில் தூவி விதைக்க வேண்டும்!
60 நாட்கள் கழித்து (அந்தச் செடிகள் பூக்கத் தொடங்க பாதி வளர்ந்த நிலையில்) அதையெல்லாம் மடித்து உழுதிட வேண்டும். மண்ணோடு மண்ணாக சேரும்படி உழுதுவிட்டு அதன் பிறகு விரைவாக மக்க அமிர்தகரைசல் உடன் நுண்ணுயிர் கலந்து நீருடன் பாச்சல் வேண்டும்.

அதன்பின் எதை விதைத்தாலும் பயிர் நன்கு வளரும். நிலம் பண்பட்டதாகிவிடும்.
50 ஆண்டுகளாக பூச்சிக்கொல்லி, வேதிஉப்புகளால் பாழாகிப்போன நிலமானாலும் அதைப் பண்படுத்தும் இம்முறையை இயற்கை வேளாண் பேரறிஞன், தமிழினப்பெரியார், மாசற்ற மண்காதலன் நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்துள்ளார்.

17/07/2018

செய்தியை சரியாக சொல்லுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அந்த செய்தி சாமான்யனுக்கும் புரியும் அளவில் இருக்கவேண்டும் அண்மைக்காலத்தில் பெரும்பாலானோரை பேச வைக்கும் விஷயம். காவிரி ஆறும் அது தொடர்பாக ஆண்டுக்கணக்கில் நடந்த சட்டப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும்..

காவிரி மேலாண்மை ஆணையம், அது செயல்படப்போகிற விதங்களையெல்லாம் விட்டுவிடுவோம். அதைவிட முக்கியமானது கர்நாடக அணைகள், காவிரி ஆறு, மேட்டூர் அணை, டிஎம்சி போன்றவை தொடர்பான விஷயங்கள் பற்றி ஒரு பாமரனுக்கு எளிதான புரிதல் முயற்சியை செய்வோம்.

தமிழகத்தில் திருச்சி கல்லணையில் காவிரி, கொள்ளிடம் என பிரிந்துபோய் இருவேறு இடங்களில் கடலில் கலக்கிறது. அதே காவிரிதான், கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகி பின்னர்தான் முழுமையான காவிரியாக உருவெடுக்கிறது

கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் அதை தமிழகம் வாங்கி வைத்து தேக்குகிற ஒரே இடம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைதான். இந்த மேட்டூருக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்று பார்ப்போம்.

மேட்டூருக்கு கர்நாடகாவிலிருந்து காவிரி நீர், இரண்டு அணைகளிலிருந்துதான் நேரடியாக கிடைக்கிறது.. ஒன்று கேரளா- கர்நாடக எல்லையில் உள்ள கபினி அணை.. அங்கு திறக்கப்பட்டால் கபினி ஆறாக வந்து, 150 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து திருமுக்கூடலு நர்சிபூர் என்ற கோவில் நகரத்தில் காவிரியுடன் கலந்துவிடுகிறது. பின்னர் அப்படியே ஒகேனெக்கலுக்கும் வந்து சேரும்..

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் தரும் பிரதான இன்னொரு அணை மைசூருவிலிருக்கும் கிருஷ்ணராஜசாகர் என்ற கேஆர்எஸ்.. இங்கு திறக்கப்படும் தண்ணீர் காவிரியாக வந்து திருமுக்கூடலு நர்சிபூரில் கபினி தண்ணீரை ஸ்வீகரித்துக்கொண்டு முழுமையான காவிரியாக வலுப்பெற்று ஒகேனெக்கலுக்கு வரும்.

காவிரி என்றால் ஹேமாவதி, ஹாரங்கி என்று மேலும் இரண்டு அணைகள் பெயர் அடிபடுமே அவைகள் எங்கே? இந்த இரு அணைகளும் நிரம்பி அவற்றிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும்.

கபினியிலிருந்து நேராகவும் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் மூலமாகவும் தமிழகத்திற்கு காவிரியில் கிடைக்கிறது..

காவிரியின் நான்கு அணைகளை திறக்காமல் கர்நாடகம் எவ்வளவு தண்ணீர் தேக்கிவைக்க முடியும்? கபினி அணை 15.67 டிஎம்சி.. ஹேமாவதி 35.76 டிஎம்சி ஹேரங்கி அணை 8.07 டிஎம்சி. கிருஷ்ண ராஜசாகர் அணை 45.05. என மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்கலாம்.

தமிழகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.4 டிஎம்சி என்பதை இங்கே நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்..

ஆமாம் டிஎம்சி..டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எம்மாம் அளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது தௌஸன் மில்லியன் கியூபிக் ஃபீட்.. அதைத்தான் சுருக்கி டிஎம்சி என்கிறார்கள். தெளிவாக புரியும்படி சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர் அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். நமது டாஸ்மாக்கின் ஒரு வருட கலெக்ஷன்.

இதே ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றால் 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை தேற்றிவிடுவான். ஒரு டிஎம்சியை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். இவ்வளவு தண்ணீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் அடிக்க சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். இப்போது புரிகிறதா ஒரு டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?

அடுத்து அணைகளின் கொள்ளளவை பார்ப்போம்.. ‘’ஒரே நாளில் ஐந்தடி உயர்ந்தது.. பத்து அடி உயர்ந்தது.. 80 அடியை தாண்டியது… 100 அடியை தொடப்போகிறது.. என்றெல்லாம் டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூசை அடிப்பார்கள். ஆழ்ந்து யோசித்தால் இந்த அடி கணக்கால் ஒரு புண்ணாக்கு பிரயோஜனமும் கிடையாது..

கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி. தண்ணீர் கொள்ளளவு 45.05 டிஎம்சி. மேட்டூர் அணையின் உயரமோ 120 அடி. ஆனால் கொள்ளளவு 93.4 டிஎம்சி.. அதாவது மேட்டூரில் இரண்டு கேஆர்எஸ்சை வைத்துவிடலாம்.. மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.. மூன்று பவானி சாசர்களை மேட்டூரில் வைக்கலாம்..

நம்ம திருவண்ணாமலை சாத்தனூர் அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.

நிலைமை இப்படியிருக்க, இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது என்று அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பத்தில் முழு அர்த்தம் உள்ளதா?

நமது மேட்டூர் அணைக்கே வருவோம். அதில் 50 அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி.. 75 அடியை தொட்டால் 37 டிஎம்சி.. 100 அடி..100 அடி என்று சொல்வார்களே அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்.. ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும். அதாவது மேட்டூர் அணை 100 லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணை அளவுக்கு தண்ணீர் தேவை.

அப்படியென்றால் முல்லைப்பெரியாறு வைகை, கிருஷ்ணகிரி போன்ற அணைகளில் இத்தனை அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது..உயர்ந்துகொண்டே இருக்கிறது என்று அடிக்கணக்கை மட்டும் வைத்து தகவலைச்சொன்னால் அங்கே பரபரப்பை தவிர என்ன இருக்கப்போகிறது. என்னதான் புரிந்துவிடப்போகிறது?

அணை தொடர்பான செய்தி என்றால் பாமரர்களுக்கு விளங்குகிற மாதிரி எளிமையாக இருக்கவேண்டும். எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது என்பதோடு, அணையின் கொள்ளளவில் எவ்வளவு நீர், எத்தனை சதவீதம் நீர் இருக்கிறது என்று சொன்னால் சுபலத்தில் புரிந்துவிடும்..

இன்று காலை (ஜூலை 16) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை தொட்டுவிட்டது. நீர் இருப்பு 50 டிஎம்சி… மொத்த கொள்ளளவில் இது 53 சதவீதம்.. அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..

‘’120 அடியில் 90 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு.. 90 அடியை தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை..

அவ்வளவே.

13/07/2018

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம்.

சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.
உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளிபிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.
நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம்.

இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.

நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்.
மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி.

மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது அதில் நனையலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து. எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியபடுத்துவோம்...!

.

14/06/2018

பாரம்பரிய அரிசி

கிச்சிலி சம்பா - 70/கி
பொன்னி - 65/கி
தூயமல்லி - 70/கி
மாப்பிள்ளை சம்பா- 95/கி

Available @ திருவண்ணாமலை

02/06/2018

கோழிகளுக்கான நோய் தடுப்பூசியாளர் - செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி

02/06/2018

Women farmers want millets under NREGA (National Rural Job Guarantee Scheme); seek MSP (Minimum Support Price)

Address

54, வையாபுரி நகர் 4 வது குறுக்கு சந்து
Karur
639002

Opening Hours

Monday 9:30am - 7:30pm
Tuesday 9:30am - 7:30pm
Wednesday 9:30am - 7:30pm
Thursday 9:30am - 7:30pm
Friday 9:30am - 7:30pm
Saturday 9:30am - 7:30pm

Telephone

9940825359

Website

Alerts

Be the first to know and let us send you an email when பசுமை சேவகன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பசுமை சேவகன்:

Share