12/06/2014
பாரம்பரிய சின்னமான பழங்கற்கோயிலைப் புதுப்பித்து அச்சிவன் கோவிலுக்கு பூஜை ஏற்பாடு செய்ய ஒரு வேண்டுகோள்
தேனி மாவட்டம்ää உத்தமபாளையம் வட்டத்தில் தேவாரம் என்ற சுமார் 20000 மக்கள் தொகை கொண்ட ஒரு அழகிய கிராமம் உள்ளது. இங்கு தென்னையும்ää மரவள்ளிக் கிழங்கும் அதிகமாக விளைகிறது. மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரத்தில் கேரள எல்லையில் இக்கிராமம் உள்ளதால் அநேகருக்கு கேரளாவில் ஏலத்தோட்டம் உள்ளது. மேலும் கேரளாவிலிருந்து அதிக அளவில் ஏலக்காய் இங்குள்ள வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டுää சுத்தம் செய்யப்பட்டுää தரம் பிரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. பெங்க@ரைப் போன்றே ஆண்டு முழுவதும் சம சீதோஷ்ண நிலையும்ää ஏலக்காய் மணமும்ää கமழும் ஊர் தேவாரம் ஆகும்.
இங்கு சுமார் 500 ஆண்டுகள் பழமையான முழுதும் கற்களாலேயே கட்டப்பட்டää கலைநயம் கொண்ட சிற்பங்களும்ää கல்வெட்டுகளும் நிறைந்த அழகிய ஒரு சிதிலமடைந்த கோயில் உள்ளது. அருள்மிகு அவினாசி ஈஸ்வரர் என்ற சுவாமியும்ää அருள்மிகு பெருங்கருணைநாயகி என்ற அம்மனும் இக்கோவிலில் எழுந்தருளியுள்ளனர். நமது பாரம்பரியத்தின் சரித்திர சான்றாக விளங்கும் இக்கோயில் சின்னதேவி குளக்கரையில் அமைந்துள்ளது அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானது. தமிழகத்திலேயே இங்கு தவிர கோவை மாவட்டம் அவினாசியில் மட்டுமே அருள்மிகு அவினாசி ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பூஜையின்றி இருக்கிறது.
கல்லால் ஆன இத்திருக்கோயிலை முழுவதுமாக பிரித்து உடைந்த கற்களுக்குப் பதிலாக புதிய கற்களை வைத்து கட்டியும்ää சுவாமிக்கு கோபுரம் எழுப்பியும் தனி அம்மன் சன்னதி ஏற்படுத்தியும்ää திருப்பணி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 60 இலட்சம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அருள்மிகு அவினாசி ஈஸ்வரர் அறக்கட்டளை என்ற பதிவு பெற்ற அமைப்பு ஒன்று ஆன்மீக ஈடுபாடு கொண்டோரால் தொடங்கப்பட்டுää மேற்படி திருக்கோவிலைத் திருப்பணி செய்வது என்று .2..
செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக பிரபல ஏலக்காய் வணிகர் திரு.பு.நாகராஜன் அவர்களும்ää செயலாளராக ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு.P.மரகதவேல் அவர்களும்ää பொருளாளராக திரு.ஏ.நாகராஜன் அவர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
500 ஆண்டு கால பாரம்பரியத்தின் சின்னமாய் விளங்கும் இக்கோவிலைப் புதுப்பிக்கவும்ää ஒரு சிவன் கோயிலில் முறையான பூஜையை 60 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பிக்கவும் தங்களின் ஒத்துழைப்பும்ää பண உதவியும் தேவைப்படுகிறது. அன்பு கூர்ந்து தாங்கள் இத்திருப்பணியில் பங்கு கொள்வது மட்டுமல்லாமல் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் பங்கு கொள்ளச் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு பண உதவி செய்து ஒத்துழைப்பும் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம்.
இந்த வேண்டுகோளைத் தங்களுக்கு வேண்டிய அனைவருக்கும் இமெயில் அனுப்பி உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
தங்களின்
அருள்மிகு அவினாசி ஈஸ்வரர் அறக்கட்டளை
தேவாரம்
தொடர்பு முகவரி:
Mr.G.Nagarajan, Mobile No. 9443054877
Mr.P.Maragathavel, Mobile No. 9894171759
Mr.V.Naganathan, Mobile No. 9442088713
Bank details:
Account Name : Arulmigu Avanashi Eswarer Trust, Thevaram
Bank : Tamilnadu Mercantile Bank,
Pannaipuram, Theni District.
Savings Account Number : 072100050304600
IFSC Code : TMDL0000072