Tenkasi dist second sales item

Tenkasi dist second sales item sell or buy any item or used item

11/08/2026

தமிழ்நாட்டுக்கு ரேபிடோ பைக் டாக்சி அவசியமான ஒன்று. தடை செய்யப்பட வேண்டிய விஷயங்கள் எவ்வளோ இருக்கு, அதையெல்லாம் விட்டுவிட்டு ரேபிடோவை எதுக்கு தடை பண்ணாங்கனு தெரியல… சென்னை க்கு ரேபிடோ பைக் டாக்சி எதுக்கு அவசியம்னு ஒரு live எக்சாம்பிள் பாக்கலாம்..

பெங்களூர்ல 3 கிமீ போக ரேபிடோ/ஓலா ஏதாவது ஒரு ஆப்ல புக் பண்ணோம்னா தோராயமா 79 காட்டும். புக் பன்ன உடனே ஆட்டோ வரும். போக வேண்டிய இடத்துக்கு ரீச் ஆனதும் சரியா 79 Gpay ல அனுப்புனா போதும்.

சென்னைல 3 கிமீ போக ரேபிடோ/ஓலா ஏதாவது ஒரு ஆப்ல புக் பண்ணோம்னா தோராயமா 95 காட்டும். புக் பன்ன உடனே ஆட்டோ வருமானா ஆட்டோ வராது. ஆட்டோ ஓட்டுறவன் கிட்ட இருந்து கால் வரும். அட்டனெட் பண்ணதும் “ஆட்டோ புக் பண்ணிக்கிறியா? ன்னா அமௌண்ட் காட்டுது? 95 காட்டுதா, ரவுண்டா 250 குடுகுறியா? 250 குடுத்தா ஆட்டோ வரும்.. இல்லனா நீயே கேன்சல் பண்ணு, கேன்சல் பண்ணலனா ₹ #%^, #%} வார்த்தைகள் வரும்.

கேரளா போனா அங்க ஆட்டோ புக் பண்ண ஆப் தேடனும் னு அவசிமே இல்ல. ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ புடிச்சா கூட ஒரு கிமீ க்கு ₹30 தான். அதுக்கு மேல கேக்க மாட்டாங்க.

கேரளா, கர்நாடகா மட்டுமல்ல , மும்பை, புனே, ஹைதரபாத், டெல்லினு இந்தியாவின் அனைத்து வளர்ந்த நகரங்களிலும் நியாயமான விலையில் ஆட்டோ கிடைக்கும் சென்னையை தவிர.. இத்தனைக்கும் டெல்லி போன்ற நகரங்களில் ரிக்சா வண்டிகள் அதிகம், இருந்தும் கூட நியாயமான விலையில் ஆட்டோக்கள் இயங்குகின்றன..

ஆடு நனையுதேனு ஓநாய் அழுவதை போல
தமிழ்நாட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒப்பாரி வைக்கும் விஷயம் “பைக் டாக்சில போறவங்க உயிருக்கு பாதுகாப்பு இல்ல”.. என்பதே.. அடடா 3கிமீ போக 200, 300 என கேட்டு சாமானியர்களின் இரத்தம் குடிக்கும் ஆட்டோ ஓநாய்களுக்கு என்ன ஒரு அக்கறை…🫠

நீங்க போராட்டம் பண்ணுங்க… நாங்க யாரும் உங்க கூட இல்ல
Naveen Raj

08/08/2026

#நீறுபூத்தநெருப்பு

ஆங்கிலேயர்கள் ஒலிபெருக்கியைக் கண்டுபிடித்தார்கள்.
தேவாலயங்களில் பொருத்தி அலற விட்டார்கள்.

அந்தக் கருவியை வைத்து,
தங்கள் கடவுள்களைப் பரப்புகின்ற வேலையில்
இந்துக்களும், முஸ்லிம்களும் இறங்கினார்கள்.

கடந்த நூற்றாண்டில்
மிக மிக அரிதாக ஒலித்துக் கொண்டு இருந்தது.

இன்று தமிழ்நாட்டில் அனைத்து வழிபாட்டு இடங்களிலும் ஒலிபெருக்கிகள் அலறுகின்றன.

காவல்துறை உரிமம் ஒன்றும் கிடையாது.
எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
நமக்கு எதற்கு வம்பு? என ஒதுங்கிக் கொள்கின்றார்கள்.

இதனால், தமிழ்நாட்டில் அமைதி சீர்குலைந்து,
தமிழன் சாதி மத கொலை வெறியன் ஆகிவிட்டான்.

சங்கரன்கோவிலில் இரண்டு மசூதிகளும்,
சில தேவாலயங்களும் உள்ளன.
என் வீட்டுக்கு அருகில் இல்லை.
எனவே, அங்கிருந்து ஒலிபெருக்கி அலறலை நான் கேட்டது இல்லை.
ஆனால் சங்கரன்கோவில் கோவிலில் இருந்து புது வழக்கமாக இப்படித் தொடங்கி இருக்கின்றார்கள்.
அதுவும் அலற விடுகிறார்கள்.
சுமார் அரை கிலோமீட்டர் தள்ளி இருக்கின்ற என் வீட்டுக்கே அலறுகிறது என்றால்,
கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள் நிலைமை???

உலகப் பயணி என்கிற முறையில் நிறைய சுற்றுகிறேன்.
தமிழ்நாடு முழுமையும் கோவில்களில் இருந்து ஒலிபெருக்கி அலறல் ஆயிரம் மடங்கு பெரிதாக வளர்ந்து விட்டதை உணர்கிறேன்.

உறவினர்கள் இருப்பதால்
தென்காசிக்குத் தொடர்ந்து போய் வருகின்றேன்.
புளியங்குடி பேருந்து நிலையத்தில் பலமுறை காத்து இருந்தேன்.

அங்கே ஒரு கோவிலில்,
இது எங்கள் சாதிக்குச் சொந்தமான கோவில் என ஒலிபெருக்கி அலறியது.

அப்படி என் வாழ்நாளில் முதன்முறையாக அங்கேதான் கேட்டேன்.

1996 ஆம் ஆண்டு,
மதுரை பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தைப் பிரித்து,
சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் என கலைஞர் அறிவித்தார்.

அவ்வளவுதான்.
தென்மாவட்டங்கள் பற்றி எரிந்தன.
வன்முறைகள் வெடித்தன.
நெல்லை மண்டலத்தில் 40 க்கும் மேற்பட்டோர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
இரண்டு மாதங்களாகப் பேருந்துகள் ஓடவில்லை.
நாங்கள் எங்கேயும் போக முடியாமல் முடங்கிக் கிடந்தோம்.
தொடரிகள் மட்டும் ஓடின.
அதன்மீதும் நிறைய கல்வீச்சுகள்.
தண்டவாளத்தில் பாறைகளை வைத்தார்கள்.

வேறு வழி இல்லாமல்,
தமிழ்நாட்டின் மாவட்டங்கள், பேருந்துகளில் இருந்த சாதிப் பெயர்களைக் கலைஞர் நீக்கினார்.

ஓரளவு அமைதி திரும்பியது.

இன்று அதே நிலைமை ஏற்பட்டு வருகிறது.
காரணம் இந்த ஒலிபெருக்கி அலறல்கள்.

இதை நான் நேற்று எழுதினேன்.
அவ்வளவு வசைமொழிகள்.
எச்சரிக்கையாக இருந்து உடனுக்கு உடன் பார்த்து அழித்துக் கொண்டே இருக்கின்றேன்.

ஒரு சாதி ஆள் என் அலைபேசி எண் கேட்கிறார்.
பலர் மிரட்டுகிறார்கள்.

இந்தப் பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றது.

தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்
தென் மாவட்டங்களில் மீண்டும் மிகப்பெரிய வன்முறை வெடிக்கும்.

வெள்ளபாண்டியர்

திருநெல்வேலி நெல்லையப்பர் தெப்பக்குளம் அருகே ஒரு கோவில் உள்ளது
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பிள்ளைமார் சமுதாயத்திற்குச் சொந்தமான கோவில் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்

பேராசிரியர் முனைவர் ஆறுமுகம் ஜெகதீசன்

எல்லா ஊர்களிலும் இந்தப் புதிய நடைமுறையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

கரு செல்வ கரிகாலன்

சாதிப் பெயர் சொல்லாமல் தமிழகத்தில் ஏதேனும் கோவில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது உண்டா? இங்கு சாதிப் பெயர் சொல்வது பிரச்சனை இல்லை,
யார் சொல்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

மா.திருமுருகன். எம்ஏ.எம்பிஃல்

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான கிராமப் பகுதிகளில் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள ஊர்களில் உள்ள கிராமக் கோயில்களில் கோயில்களில் இன்றும் இந்த சமுதாயத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட என்று சொல்லப்பட்டு வருகிறது
அரசு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

Ckmurugan

எல்லா ஊர்களிலும் ஒலிபெருக்கிகளில்
எல்லாச் சாதிப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இரா. சண்முகராசு

சனாதன சாதி ஆதிக்கத்தின் மூலமே கோவில்
கரு அறைகள்தானே?

Rkp Mathivanan

எங்கள் ஊரில் எட்டுக் கோவில்களில் சொல்லுகின்றது ஒவ்வொரு கோவிலும் அரை நிமிட வித்தியாசம் மாறிமாறி ஒலிக்கும்
என்ன பண்றது?
சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டி இருக்கிறது

அருணகிரி

எந்த ஊர் எந்தெந்தக் கோவில் என்று எழுதுங்கள் பொதுநல வழக்கு தொடருவோம்

Rkp Mathivanan

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் காடந்தங்குடி கிராமம்

Muthuraj Ganapathy

திருநெல்வேலிதான் ஆகக் கழிவு.

குமார் ஜீ

எல்லா இடம் இதே தான்.
15 நிமிடம் ஒரு முறை கூட ஒலிக்கிறது

பாரதி தமிழ்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தில் ஒரு ஊரில் மாரியம்மன் கோவிலில்ஒலிக்கிறது

Kowshick Naga

புளியன்குடி

Sathya Evita

தூத்துக்குடியில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கோவில் இருக்கிறது..
நாடார் பத்ரகாளியம்மன் கோவில்..
மடத்தூரில் நாடார் தெரு, நடு தெரு, தேவர் தெரு என்று இருக்கிறது.. நாடார்கள் ku ஒரு கோவில் தேவர் சாதிக்கு ஒரு கோவில் இருக்கிறது..

கு. சரவணன்

எங்கள் ஊர் பகுதியில் அப்படி எதுவும் சாதி பெயர் சொல்லாது ஐயா,
பொதுவாக ஊர் பெயர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களை மட்டுமே சொல்லும்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வரகூர் கிராமம்.

Asarudheen KM

எங்க வீட்டு பக்கத்துல சர்ச் பெல் அடிச்சு பைபிள் வசனம் சொல்றாங்க...
1 மணினா ஒரு பெல் 12 மணினா 12 பெல்...😎

ராஜேஷ்

மதுரையில் வளர்ந்து வரும் பகுதி ஆன நா.புதுக்கோட்டையில் வருடத்தின் 365 நாளும் ஒலி பெருக்கி ஒலித்து கொண்டே இருக்கிறது அங்கு வளர்பவர்களும் அதை கண்டு கொள்வது இல்லை

Suresh Kumar
·
தமிழக அரசு எவ்வித பாரபட்சமுமின்றி
அனைத்து வழிபாட்டுத்தலங்களிம் உள்ள
கூம்பு ஒலிபெருக்கிகளை அப்புறப்படுத்தவேண்டும். சவுண்ட் பாக்ஸ்கள் பத்தடி உயரத்துக்குமேல் வைக்ககூடாது என்பதை கடுமையாக நடைமுறைபடுத்தவேண்டும்.
வழிபாட்டுதலங்களின் 500மீட்டருக்குள் மட்டுமே ஒலி கேட்குமாறு கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.

தூத்துக்குடி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த ஒருவர்,
கிராமங்களில் இருந்த சாதி அடையாளங்களை அழித்தார்.
அப்படி 5000 க்கும் மேற்பட்ட அடையாளங்களை அழித்தார்.
சாதி வெறியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுத்துக் கொண்டே இருந்தார்.
இன்றைக்கும்,
தென்மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் இடையே சாதி வெறி தலைவிரித்து ஆடுகிறது.

அதற்கு மேல் இப்படி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மதவெறியைப் பிள்ளைகள் மண்டையில் திணிக்கின்றார்கள்.
மாணவர்கள் தேர்வுக்குப் படிக்க முடியவில்லை..
முதியவர்களுக்கு உறக்கம் பறிபோய் விட்டது.

தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டுத் துறையும்
காவல்துறையும் களத்தில் இறங்கினால்தான்,
அமைதியை நிலைநாட்ட முடியும்.

வரலாற்றுப் பதிவாளர் அருணகிரி
8.8.2026

29/07/2026

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களைகொண்டு செல்ல தமிழ்நாடு அரசுதடை விதித்து சுமார் 12, மணிநேரம் கூட ஆகவில்லை, அதற்குள், உடனே கேரள முதல்வர் மலையாள அரசியல் வாதிகள், ஒருபுறம், மறுபரிசீலனை, கண்டனம், கட்டுமான தளவாட பொருள்கள் கிடைக்காமல் திண்டாட்டம், மறுபுறம், தமிழ்நாட்டின் கனிம வளங்களையே, சுரண்டித்தின்னும் அரசியல் பணப் பேய்களையும், வண்டி ஓட்டுனர்களையும், அரசியலற்ற குளப்பவாதிகளைக்கொண்டு, தமிழ்நாட்டில் தூண்டிவிட்டு மலையாள அரசு சுயலாபமடைய பலவழிகள் கொண்டு கையாளத் துடிக்கிறது, ஆனால், வீணாக அரபிக்கடலில் கலக்கும் தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கொடுக்கமறுத்தும், இயற்கை மழை கொடுக்கும் மலை முகடுத்தண்ணீரையும், காலம் பொய்த்தாலும், கருணையாக கொடுக்கும் மலை ஊற்றுத்தண்ணீரும், நமக்கு கொடுக்கமறுக்கும் மலையாள அரசுக்கு தமிழ்நாட்டு கனிமவளங்கள் தேவையாகிறது

மலையாள நாட்டில் மலைகள் இல்லையா கனிம வளங்கள்தான் இல்லையா இருக்கின்றது ஆனால் தம்நாடு கனிமவளம் நிறைவோடு இருக்கவேண்டும், கனிமவளம் சூரையாடப்பட்டால், கட்டாயம் நிலநடுக்கம் வரும், வந்தால் நாடு பிழைக்காது என்ற உணர்வை மலையாள மக்களுக்கு பால பள்ளியிலே நாட்டுப்பற்றையும்,வாழ்வுபற்றையும், புரிதலுடன் கற்றுக்கொடுத்து நாட்டை உயிரென போற்றுகிறான்! ஆனால், தமிழ்நாட்டில் அனைத்தும் கானல்நீராகவே உள்ளது, அன்னை செண்பகவள்ளி, கன்யாமதகு தடுப்பு அணை அமைந்து உள்ள இடம் முழுக்க முழு இடமும் நமது தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது இருந்தலும் அதை பராமரிக்கும் யோக்கியதை நம்மிடம் இல்லை காரணம் சில்ர, துட்டு, பணம், காசு, மணி, சம்பு, செம்பு, போன்ற சொறிபிடித்த அரசியலால் இதுவரை தமிழ்நாட்டு விவசாயிகள் கேட்பாரற்று, நாதியில்லா விவசாய உயிரற்று போயிருந்தான் இன்று ஏதோ ஒர் உறை கேட்டுள்ளது, இன்று கனிமவளம், இனி நீர்வளம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடையே வரும், என்ற ஏக்கத்துடன், தமிழன்னை செண்பகவள்ளி தாயை வேண்டுவோம் அனைவரும்! வருவாள் தாய் அருள்வாள் தண்ணீராய், நாடெங்கும் பசுமை நல் மணிகளாய் விவசாயம் வரபுயர நீர்உயரும் நீர் உயர நெல்உயரும் நெல்உயர குடி உயரும் குடி உயர கோன்உயரும் அஃகோன் உயர (நல்லரசு) மக்கள் சிறந்த வாழ்வு பெறுவர்! KS Radahakrishnan

19/07/2026
18/07/2026

சமீபத்தில் கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர், "அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கினால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்" என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தக் கருத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது. ஊழலுக்கு எதிராக மக்கள் துணிச்சலுடன் நிற்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், ஒரு நல்ல நிர்வாகத்தின் வெற்றி, மக்கள் துணிச்சலாக "இல்லை" என்று சொல்ல வேண்டிய நிலையை உருவாக்குவதில் இல்லை. அப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத நிர்வாக அமைப்பை உருவாக்குவதில்தான் இருக்கிறது.

அரசின் மிகப் பெரிய வெற்றி, "லஞ்சம் கொடுக்காதீர்கள்" என்று மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது அல்ல; "லஞ்சம் கொடுக்க முடியாத நிர்வாக அமைப்பை" உருவாக்குவதுதான்.

ஒரு குடிமகன் பல நாட்கள் அரசு அலுவலகத்திற்கு அலைந்து திரிகிறார். அவரது கோப்பு எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. யார் கையொப்பமிட வேண்டும் என்று தெரியவில்லை. எப்போது வேலை முடியும் என்பதும் தெரியவில்லை.

இந்த நிச்சயமற்ற சூழலில்தான் சிலர், "வேலையை சீக்கிரம் முடித்துத் தருகிறேன்" என்று கூறி லஞ்சம் கேட்கும் வாய்ப்பு உருவாகிறது.

எனவே, ஊழலின் அடிப்படை காரணம் எல்லா நேரங்களிலும் ஒரு தனிநபரின் ஒழுக்கக் குறைபாடு மட்டுமல்ல; வெளிப்படைத்தன்மை இல்லாத நிர்வாக அமைப்பும் கூட.

இந்தியாவில் பல மாநிலங்கள் இந்தப் பிரச்சினைக்கு அமைப்பு ரீதியான தீர்வைத் தேர்ந்தெடுத்துள்ளன.

மத்தியப் பிரதேசம், பீகார், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா போன்ற மாநிலங்கள் Right to Public Services Act அல்லது Guaranteed Delivery of Public Services Act என்ற சட்டங்களை இயற்றியுள்ளன.

இந்தச் சட்டங்களின் நோக்கம் எளிமையானது.

அரசுச் சேவைகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கப்பட வேண்டும். காரணமின்றி தாமதம் ஏற்பட்டால் அதிகாரி பொறுப்பேற்க வேண்டும். சில மாநிலங்களில் நிர்வாக அபராதமும் விதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு மேல்முறையீட்டு உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

இது ஊழலை ஒழிப்பதற்கான அமைப்பு ரீதியான அணுகுமுறை.

தமிழ்நாட்டில் பல துறைகளில் குடிமக்கள் சாசனம் (Citizen's Charter) நடைமுறையில் உள்ளது. சில சேவைகளுக்கு காலக்கெடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை முழுமையான சட்டப் பாதுகாப்புடன் இயங்குவதில்லை.

அனைத்து அரசு சேவைகளுக்கும் பொருந்தும் சட்டப்பூர்வ காலக்கெடு, காரணமற்ற தாமதத்திற்கு அதிகாரியின் தனிப்பட்ட Accountability, நிர்வாக அபராதம், Independent மேல்முறையீட்டு அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான "பொது சேவை உரிமைச் சட்டம்" தமிழ்நாட்டில் இதுவரை இல்லை.

தமிழ்நாடு இந்த அனுபவங்களை ஆய்வு செய்து, அதைவிட மேம்பட்ட ஒரு சட்டத்தை உருவாக்கலாம்.

அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு அரசுச் சேவைக்கும் சட்டப்பூர்வ காலக்கெடு.

காரணமற்ற தாமதத்திற்கு அதிகாரியின் Accountability.

தேவையான இடங்களில் நிர்வாக அபராதம்.

Independent மேல்முறையீட்டு அமைப்பு.

அனைத்து சேவைகளையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல்.

மனித தலையீட்டைக் குறைத்தல்.

ஒவ்வொரு கோப்பின் நிலையையும் பொதுமக்கள் நேரடியாக அறியும் வசதி.

ஒவ்வொரு நடவடிக்கைக்கும் டிஜிட்டல் பதிவேடு (Digital Audit Trail).

ஒரு குடிமகன் தனது விண்ணப்பத்தை கைப்பேசியிலேயே சமர்ப்பிக்க முடிந்தால்...

கோப்பு தற்போது எந்த அதிகாரியிடம் உள்ளது என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தால்...

எப்போது முடிக்க வேண்டும் என்பது முன்கூட்டியே தெரிந்தால்...

தாமதம் ஏற்பட்டால் காரணம் தானாகப் பதிவு செய்யப்பட்டால்...

அப்போது லஞ்சம் கேட்கும் வாய்ப்புகள் இயல்பாகவே குறையத் தொடங்கும்.

ஊழலை ஒழிப்பதில் மிகச் சிறந்த வழி, ஊழல் செய்யும் வாய்ப்புகளைக் குறைப்பதே.

இத்தகைய சட்டத்தை அரசு அவசரமாக கொண்டு வரக் கூடாது.

முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், நிர்வாக வல்லுநர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் ஒரு வெள்ளை அறிக்கை (White Paper) தயாரித்து, பொதுமக்களின் கருத்துகளையும் பெற்று இறுதி சட்டத்தை உருவாக்க வேண்டும்.

இதனால் அரசு ஊழியர்களின் நடைமுறைச் சிக்கல்களும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் சமநிலைப்படுத்தப்படும்.

ஊழலை எதிர்ப்பதில் ஒழுக்கப் போதனைகளும் அவசியம்.

ஆனால், நிர்வாக அமைப்பைச் சீர்திருத்தும் சட்டங்களே நீண்டகால தீர்வை வழங்கும்.

"லஞ்சம் வாங்கினால் கொடுக்காதீர்கள்" என்று மக்களிடம் கூறுவது ஒரு நல்ல அறிவுரை.

ஆனால், அதைவிட உயர்ந்த நிர்வாக இலக்கு என்னவென்றால்:

"ஒரு குடிமகன் 'லஞ்சம் கொடுக்க முடியாது' என்று சொல்ல வேண்டிய சூழ்நிலையே உருவாகாத வகையில், காலக்கெடுவும், முழுமையான டிஜிட்டல் வெளிப்படைத்தன்மையும், Accountability ம் கொண்ட நிர்வாக அமைப்பை உருவாக்குவது."

அதுவே ஒரு உண்மையான லஞ்சம் இல்லாத அரசின் அடையாளம்.
Chandra Mowle

தாங்க முடியாத ஒலிமாசு!மக்கள் அதிகமாக, அடர்த்தியாக வசிக்கும் ஒரு நாட்டில், அதன் சமூகங்களில் பொதுவெளிகளை (public spaces) த...
15/07/2026

தாங்க முடியாத ஒலிமாசு!

மக்கள் அதிகமாக, அடர்த்தியாக வசிக்கும் ஒரு நாட்டில், அதன் சமூகங்களில் பொதுவெளிகளை (public spaces) திறந்தவையாக, சுத்தமானவையாக, சுகாதாரமானவையாக, அமைதியானவையாக வைத்திருக்க வேண்டும். இது common sense!

ஆனால் நம்முடைய பழம்பெரும் நாடான பாரத நாட்டில், தங்கத்தமிழ் நாட்டில், குறிப்பாக கற்றோர் அதிகமெனக் கொண்டாடப்படும் குமரி மாவட்டத்தில் நடப்பவை எல்லாம் தலைகீழாகவே இருக்கின்றன.

"காசேதான் கடவுளடா" என்றாகியிருக்கும் உலகமயச் சூழலில் தெய்வங்கள் எல்லாம் கேட்கும் திறனை வேகமாக இழந்து வருவதாலோ என்னவோ, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்திலும் பாடல்களை, பூசைகளை உரக்க ஒலி பரப்புகிறார்கள். செவிட்டுக் கடவுள்களும், குருட்டு பக்தர்களும், ஊமை அதிகாரிகளும் சேர்ந்து நடத்தும் ஒலி மாசுக் கொடூரம் அளவுகடந்து போய்க் கொண்டிருக்கிறது.

ஒருவரை அவரது இசைவின்றித் தொட்டால் குற்றம், வெறித்து நோக்கினால் குற்றம், அவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கத்தினால் குற்றம். ஆனால் ஒரு கூட்டம் சேர்ந்து கூம்புவடிவக் குழாய்களை விஞ்சும் பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டிகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, காது கிழிய, மூளை அதிர, இதயம் குலுங்க, இரத்த நாளங்கள் எல்லாம் வெடிக்க, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒலி மாசு ஏற்படுத்தினால் அது குற்றமல்ல, மாசுபடுத்துபவர்களின் உரிமை!

வயதானவர்கள், நோயாளிகள், பச்சைக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மாணவச் செல்வங்கள், விலங்குகள், பறவைகள் யாரும், எதுவும் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இவர்களின் கோவில் கொடை விழாக்கள் ஊரெல்லாம் கேட்க வேண்டும். இவர்களின் தலைவர்களின் மகாத்மியம் உலகமெல்லாம் ஒலிக்க வேண்டும். இவர்கள் வீட்டுக் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், சாவு என எல்லாம் எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

இந்த காட்டுமிராண்டிகளுக்கு அடுத்தவரின் உடல்நலம், மனநலம், கேட்கும் திறன், அமைதி எதுவுமே ஒரு பொருட்டல்ல. ஒலிமாசு காரணத்தால் நம்முடைய வீட்டுக்குள் நம்முடைய குடும்ப உறுப்பினர்களுடன் பேச முடியாது. ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்று உரையாட இயலாது. ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆகாது. தலைவலி வருகிறது, மனஉளைச்சல் எழுகிறது, கோபமும் எரிச்சலும் வருகிறது, உறவுகள் பாதிப்படைகின்றன.

ஆனால் ஒலிமாசாளர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது இடைவிடாது உங்கள் காதுகளுக்குள் திரைப்படப் பாடல்கள், இசைக்கருவிகள், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகளின் ஒலிகளை உருவாக்கி உங்களை "ரேப்" (ஆமாம், இதுவும் r**e தான்!) செய்து கொண்டிருப்பார்கள். நீங்கள் அவர்களின் இன்பத்தில் பங்கேற்று அனுபவித்து மகிழ வேண்டும் (ஒரு ra**st உடைய logic-ம் இதுதான்!)

வரலாறு பற்றி எழுதும்போது Friedrich Nietzsche மாடுகளுக்கு அந்த உணர்வோ, திறனோ, தேவையோ கிடையாது என்று குறிப்பிடுவார். அதேபோல, இந்த ஒலிமாசு ஏற்படுத்தும் மாடுகளுக்கு பிற மனிதர்களின் உரிமைகள், வாழ்வின் இனிமை, நல்வாழ்வு போன்றவை பற்றியெல்லாம் எந்த அடிப்படை அறிவும் கிடையாது, கவலையும் கிடையாது.

சாதி, மதம், கட்சி, தனிநபர் துதி போன்ற குண்டுச் சட்டிகளுக்குள் குதிரை ஓட்டி, அதன் மூலம் தம் வயிறுகளையும் வளர்த்து, வாழ்க்கைக்கு அர்த்தமும் பெறுவதாக நினைத்துக் கொள்ளும் இந்த பிறவிகளைப் பற்றி நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.
இவர்களிடம் civic sense, decent living பற்றியெல்லாம் வகுப்பு எடுப்பதில் அர்த்தமில்லை. தொப்பை நிறைய மதுவும், கையில் காசும், மனதில் கொண்டாட்டமுமாக திரியும் இந்தப் பிறவிகளிடம் மோதுவது வீண் வேலை.

அப்படியானால் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? மாவட்ட நிர்வாகமும், சட்டம் ஒழுங்கு அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்களும்தான் பொறுப்பு. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளவே மாட்டார்கள். காரணம் அவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்களைச் சுட்டிக்காட்டி, ஒலி மாசு கூடாது என்று ஒரு நிலைப்பாடு எடுத்தால், உடனே எழுதப் படிக்கத் தெரியாத ஓர் அரசியல்வாதி, அல்லது மதகுரு அழைத்து மிரட்டுவான். இவர்கள் பணிந்துதான் போக வேண்டி வரும். எனவே எக்கேடும் கேட்டு நாசமாகப் போங்கள் என்று பொதுமக்களை கைவிட்டுவிட்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வீடு, காவல்துறை கண்காணிப்பாளர் வீடு, அலுவலகங்கள், காவல் நிலையங்கள் அருகே யாரும் ஒலி மாசு ஏற்படுத்த முடியாது, அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் பொதுமக்கள் நொந்து, வெந்து சாவதைப் பொருட்படுத்த மாட்டார்கள். சில அதிகாரிகளிடம் என்னை/நம்மைப் போன்ற யாராவது முறையிட்டால், யார் அழைத்து முறையிட்டார்கள் என்கிற தகவலையும் உரியவர்களிடம் சொல்லிவிட்டு, ஐந்து நிமிடம் ஒலியைக் குறைக்கச் செய்வார்கள்.

குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு தேர்ந்த, அருமையான அதிகாரி. பிரச்சினையைப் புரிந்து கொள்கிறார். புதிய மாவட்ட ஆட்சியர் வந்திருக்கிறார். அவரையும் நேரில் சந்தித்துப் பேச வேண்டும். ஆனால் இந்த இரண்டு அதிகாரிகளும் மட்டும் எதுவும் செய்ய இயலாதே?

மாநில அரசு திரைத்துறையின் நீட்சியாகவே இருந்து வருகிறது. மத்திய அரசு இந்துக்கள் நாட்டில் இந்துக்களுக்கு பக்திப் பாடல்கள், கோவில் கொண்டாட்டங்கள் ஒலிபரப்ப உரிமை இல்லையா என்று உரிமைக் குரல் எழுப்பும் மதவாதக் கட்சியால் வழிநடத்தப்படுகிறது. இவர்கள் எப்படி ஒலிமாசுக்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுப்பார்கள்?

எது எப்படியானாலும், பொதுமக்களின் உரிமைகளுக்கு, நல்வாழ்வுக்கு உள்ளூர் அதிகாரிகளேப் பொறுப்பேற்றாக வேண்டும். அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதுதான் நம்முடையப் பணி.

(1) ஒலிமாசின் அளவைக் குறைக்க வேண்டும். ஒலிபெருக்கி கருவிகளுக்கு கட்டுப்பாடு வேண்டும். இவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். சவுண்ட் சிஸ்டம் வைத்திருப்போரிடம் உறுதியாகப் பேச வேண்டும்.

(2) அதிகாலை, பின்னிரவு நேரங்களில் எந்த சத்தமும் இல்லாத அமைதி நம் அனைவரின் உரிமை என்றாக வேண்டும். கோவில்களில் ஒலிமாசு ஏற்படுத்துவோர் இரவுகளில் கோவில்களுக்குள்ளே மட்டுமே ஒலி எழுப்ப முடியும், ஒலி பெருக்கிகளை உபயோகப்படுத்தக் கூடாது என்கிற அமைப்பு வேண்டும்.

(3) கோவிலுக்கு அந்தப் பக்கம் ஒரு கிலோமீட்டர், இந்தப் பக்கம் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஒலிபெருக்கிகள் நிறுவி ஊரையே அதகளப்படுத்தும் அவலத்தைத் தடைசெய்ய வேண்டும்.

(4) ஒலிமாசுப் பிரச்சினையால் வீட்டில் அமைதியாக தூங்க, வாழ முடியாதவர்கள் தங்குவதற்கு தற்காலிகப் புகலிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.

(5) ஒலிமாசுப் பிரச்சினைக்கு, அதனால் ஏற்படும் காது கேளாமை, தலைவலி, மனநலக்குறைவு போன்ற தனிப்பட்ட இழப்புக்களை சந்திப்போர் அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து நட்டஈடு பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

மேல் நடவடிக்கைகள் குறித்த உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள் தோழர்களே, நன்றி.

சுப. உதயகுமாரன்
தலைமைப் பணியாளர்:
பச்சைத் தமிழகம் கட்சி
நாகர்கோவில்,
யூலை 15, 2026.

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi dist second sales item posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category