S chinnaraj Dindigul

S chinnaraj Dindigul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S chinnaraj Dindigul, Dindigul.

19/12/2025

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!

1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.

Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.

2.Double Document நிலம்.

Power of attorney(POA) double document

அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.

POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.

அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.

3.உயில் பத்திர நில double document.

உயில் மூலம் உரிமை மாறி இருக்கா

உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.

பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.

4.Settlement பத்திர நிலம் double document .

Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.

செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.

EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.

5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.

1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.

அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.

6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?

அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.

DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.

அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.

Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.

எனவே ஜாக்கிரதை.

பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.

நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.

இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும்.

VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால் RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .

5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.

கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு

பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.

அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.

6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.

7. பட்டாவின் பயனாளி யார்?.

முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ் என்று பார்க்க வேண்டும்

மேஜர் இனாம்

ராயட்டு வாரி
1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.

இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.
------------

Minor இனாம்
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்

தொழில் முறை இனாம் நிலம்
----
தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,
வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார் இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.

சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.

ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
------------

DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
settlement etc யா என்று பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.
---------

சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.

Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.

SC & ST பிரிவினற்கு கொடுத்த AD assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.

F-பட்டா.
இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.

ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.

1970-B-Memo land =பீமா பட்டா.

B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.

Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.

ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.
--------

1956-பூமி தான நிலம்

Manual EC
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.

manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry காட்டபட்டு இருக்கும்.

பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.

ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.

Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.

பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.

பூமி தான நிலம் வாங்காதீர்.

பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.

எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.
-----------

Zero value நிலம்

-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.
-----------

கோயில் நிலம் -HR&CE நிலமா

வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ் என்று பார்க்க வேண்டும்.

கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக இருக்க கூடாது அவ்வளவே.

கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.

கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.

இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.
-----------

ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.

land reforms act.
இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
-----

1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.

RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்" என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.
-------

1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்

தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.

ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.

இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும் m
--------
1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்

நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.

UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.

Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.
--------

1976 களின் Urban land seiling act

ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.

ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.

8. கோர்ட் attached property வாங்காதீர்.

9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.

எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.
---------------

10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.

11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,

12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )

13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.

1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு 80 to 100 வருடத்திற்கு வேண்டும்.

1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.

இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்

1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.

2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.

ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல் திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.

14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.

15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.

16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள்

17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்

18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின் ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.

நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.

உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,

லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.

மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.

Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.

19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.

20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.

பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.
========

காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.

திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர் கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.
========

நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.

அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்.
இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...

23/11/2025

பத்திர பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய 16 முக்கியமான விஷயங்கள்…

உங்கள் கனவு வீடு / நிலம் எதுவித சிக்கலுமின்றி பாதுகாப்பாக வாங்க சிறிய விளக்கம்…

1. உரிமை (Title) சரிபார்ப்பு
உண்மையான உரிமையாளர் தானா?
அவர்கள் பெயரில் பத்திரங்கள், பட்டா, சர்வே, செல்லுபடியாகும் ஆதாரங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

2. மூல ஆவணங்கள் (Original Documents)
Sale deed, partition deed, settlement deed, gift deed, will probate
அனைத்தும் தொடர்ச்சியாக (Chain of Title) இருக்க வேண்டும்.

3. EC (Encumbrance Certificate) – 30 ஆண்டுகள் ( minimum )
எந்த தடைகள், கடன், முதலீட்டாளர் உரிமை, வழக்கு இல்லையென்பதை உறுதிசெய்யவும்.

4. நிலம் / வீடு மீதான கடன் (Bank Loan)
சொத்துக்கு bank loan இருந்தால்
NOC
Loan closure certificate
Release deed உள்ளதா பார்க்கவும்.

5. பட்டா, சிட்டா, அடாங்கள்
சொத்து உண்மையில் உரிமையாளர் பெயரில் பதிவாகி உள்ளதா?
புலம் / வீட்டின் பயனீடு வகை என்ன?

6. FMB / Field Map / Survey
எல்லைகள் சரியாக உள்ளதா?
GPS survey, resurvey mismatch இல்லையா?

7. Approved Plan (DTCP / CMDA / LPA)
Plot / Building approved தானா?
Building plan deviation உள்ளதா?

8. நத்தம், கிராமநத்தம், புறம்போக்கு — வகை சரிபார்த்து கொள்ளவும்
சட்டப்படி பதிவு செய்யக்கூடிய நிலமா?
Prohibited land list-ல் இல்லையா?

9. தேவையான NOC & பத்திர அனுமதிகள்
Panchayat / Municipality / Corporation
Fire NOC, Pollution NOC (சில இடங்களில்), Layout approval letter.

10. Property Tax, Water, Electricity Bill
அனைத்தும் vendor பெயரில் இருக்க வேண்டும்.
நிலுவை பாக்கி இல்லை என்பதை உறுதிசெய்யவும்.

11. Road Access / Right of Way
5 அடி / 10 அடி / 20 அடி வீதி உள்ளதா?
access வழி மீது தகராறு இல்லையா?

12. பத்திரத்தில் குறிப்பிடப்படும் எல்லைகள்
North–South–East–West boundary
சரியாக உள்ளதா?
FMB உடன் பொருந்துகிறதா?

13. வர்த்தக மதிப்பு / Guideline Value
சொத்தின் மார்க்கெட் விலை, Guideline value ஒப்பிட்டு சரியான விலை பேசுக.

14. Stamp Duty & Registration Charges
கட்டணங்கள் சரியா?
undervalue பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம் — எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை.

15. இருதரப்பு ஒப்பந்த நிபந்தனைகள்
payment schedule
handover date
penalty clauses
indemnity clause
செய்து எழுதி ஒப்பந்தத்தில் சேர்க்கவும்.

16. Lawyer Verification — மிகவும் முக்கியம்
பணம் கொடுக்கும்முன்
சட்ட வல்லுநர் மூலம் அனைத்தையும் சரிபார்க்கவும்.
இது செலவை குறைக்கும், பிரச்சனையை தவிர்க்கும்.
இந்த 16 விஷயங்களையும் சரிபார்த்தால், சொத்து வாங்குவது குறைந்தபட்ச பாதுகாப்பானதாக இருக்கும்

#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #நிலம்

01/11/2025

பத்திரபதிவு (Document Registration) செய்யும்போது — சில ஆவணங்களை பதிவு செய்ய அனுமதி இல்லை அல்லது சட்டப்படி தவிர்க்க வேண்டியவை..!

இவை பதிவு சட்டம், 1908 (Registration Act, 1908) மற்றும் வருவாய் / நில சட்ட விதிகளின் கீழ் வருபவைகள்

பத்திர பதிவிற்கு தவிர்க்க வேண்டிய (அனுமதியில்லா) ஆவணங்கள்.

1. பொய்யான / புனையப்பட்ட ஆவணங்கள் (Forged Documents)

போலி கையொப்பம், போலி முத்திரை, அல்லது உண்மையற்ற விற்பனை / தானம் / பவர்ஆவணம் போன்றவை. இவை Section 82, Registration Act-ன் கீழ் குற்றமாகும்.

2. அரசு நிலம் / புறம்போக்கு நிலம் (Government or Poramboke Land)

அரசு சொத்தாக பதிவாகிய நிலம்.

"புறம்போக்கு", "குளம்", "காலை", "மட்டுக்காடு", "நத்தம்" போன்றதாக அரசுப் பதிவில் குறிப்பிடப்பட்ட நிலம்.

இவை தனியார் நபருக்கு விற்கவோ பதிவு செய்யவோ முடியாது.

3. பாதுகாப்பு / பொதுப் பயன்பாட்டு நிலங்கள். சாலை, பள்ளி நிலம், மின்கம்பம் இடம், பூங்கா, குளம் போன்ற public purpose land. இவை அரசு / உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இருப்பதால் பதிவு தடை.

4. மீசை / வழக்கில் உள்ள நிலம் (Litigation Property)

நிலம் நீதிமன்ற வழக்கில் இருக்கும்போது (“Sub Judice”).

அந்த வழக்கு முடிவடையாது வரை பதிவு செய்யக் கூடாது.

5. முடக்கப்பட்ட நிலம் (Prohibited Land)

Section 22-A, Registration Act படி – அரசு அறிவிப்பில் “Registration Prohibited Property” என வெளியிடப்பட்ட நிலங்கள். Sub Registrar இத்தகைய பத்திரங்களை தவிர்க்க வேண்டும்.

6. பட்டா / உரிமை இல்லாத நிலம்

உரிமையாளர் பெயரில் Patta இல்லாத நிலம் அல்லது Encumbrance-ல் வேறு பெயர். முதலில் உரிமை மாற்றம் செய்யாமல் பதிவு செல்லாது.

7. Inam / Temple Trust Land

Inam, Devadaya, or Temple Trust சொத்துக்கள் —HR&CE துறை அனுமதி இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.

8. பயன்பாடு மாற்ற அனுமதி இல்லாத நிலம்

நன்செய் / புன்செய் நிலத்தை “வீட்டு மனை” என பதிவு செய்ய — Collector Approval இல்லையெனில் பதிவு செய்ய அனுமதி இல்லை.

9. Power of Attorney (POA) – Death / Revocation பின்னர்

ஆவணம் உருவாக்கியவர் இறந்த பின் அல்லது POA ரத்து செய்த பின், அதைப் பயன்படுத்தி பதிவு செய்ய முடியாது.

10. வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட, அங்கீகாரம் பெறாத ஆவணங்கள்

Embassy அல்லது Notary Public அங்கீகாரம் இல்லாத வெளிநாட்டு ஆவணங்கள் பதிவு செய்ய அனுமதியில்லை.

பதிவு தடை காரணம்

அரசு / புறம்போக்கு நிலம்,
அரசுசொத்து வழக்கில் உள்ள நிலம் நீதிமன்ற தடை Inam / Devadaya HR&CE அனுமதி தேவை நன்செய் நிலம் – Collector Approval இன்றி Land Conversion இல்லாமை போலி ஆவணம் சட்ட ரீதியாக செல்லாது
Revoked POA அதிகாரம் இல்லாமை.

சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்....

28/09/2025

வாரிசு சொத்தில் யாருக்கு உரிமை இல்லை..?
விரிவான விளக்கம்

1. பெண் பெற்றோரிடமிருந்து வந்த சொத்து (Stridhana / Inherited Property)

பெண் இறக்கும் போது:

அவளுக்கு குழந்தைகள் இல்லை என்றால் →

அந்த சொத்து அவளின் கணவனுக்கு போகாது.

மீண்டும் பெற்றோர் குடும்பத்திற்கே (அண்ணன்/தங்கை/அவர்களின் வாரிசுகள்) சென்று விடும்.

2. பிரிவில்லாத (Undivided) பங்குச் சொத்து

ஒரு வாரிசு தனது பங்கினை உடனே வெளிநபருக்கு விற்க உரிமை இல்லை.

விற்க விரும்பினால் முதலில் மற்ற பங்குதாரர்களுக்கே (Co-heirs) விற்க வேண்டும்.

இதையே சட்டத்தில் Doctrine of Pre-emption / Right of First Refusal என்கிறார்கள்.

3. தந்தையை கொன்ற மகன்

தந்தையின் சொத்தில் பங்குக்கேட்க உரிமை இல்லை.

காரணம்: சட்டத்தில் "வாரிசு தகுதி இழப்பு" (Disqualification by crime).

4. விதவை மனைவி (Remarriage situation)

கணவன் இறந்தபின், அவரின் தந்தை வழியாகக் கிடைக்கும் பூர்வீக சொத்தில்,

விதவை மனைவி மறுமணம் செய்து விட்டால் → அந்தச் சொத்தில் உரிமை இல்லை.

5. மதம் மாறுதல் (Religion Conversion)

இந்து குடும்பத்தில் இருக்கும் பேரன் மதம் மாறிவிட்டால் → இந்து தாத்தாவின் சொத்தில் உரிமை இல்லை.

ஆனால், மகன் மதம் மாறினாலும் → தந்தையின் சொத்தில் உரிமை உண்டு.

6. உயில் / Settlement இருந்தால்

சொத்து வைத்திருப்பவர் உயிருடன் இருக்கும் போது உயில் / செட்டில்மெண்ட் எழுதியிருந்தால் →

அந்த உயிலின்படி சொத்து போகும்.

அப்போது வாரிசுகள் உரிமை கோர முடியாது.

7. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை (Unborn child)

கணவன் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் → அந்த கருவில் இருக்கும் குழந்தைக்கு உரிமை உண்டு.

ஆனால், குழந்தை உயிருடன் பிறக்காமல் இறந்து விட்டால் → அந்த சொத்தில் உரிமை இல்லை.

சட்டப்படி சில சூழ்நிலைகளில் நெருங்கிய உறவினருக்கே சொத்தில் உரிமை கிடையாது.

கொலை, மறுமணம், மதம் மாறுதல், குழந்தையில்லாத பெண் சொத்து, உயில், பிரிவில்லா பங்கு போன்றவை முக்கிய காரணங்கள்

15/09/2025

DTCP Approval பற்றி விளக்கம்:

DTCP Approval என்றால் என்ன?

DTCP = Directorate of Town and Country Planning (தமிழ்நாடு நகர மற்றும் ஊரக திட்டமிடல் இயக்ககம்).

வீட்டு நிலம் (House Plot) அல்லது Layout உருவாக்கும்போது, சட்டப்படி DTCP approval எடுக்க வேண்டும்.

Approval இல்லாமல் இருக்கும் Layout = அங்கீகாரம் பெறாத Layout (Unapproved Layout).

ஏன் DTCP Approval அவசியம்?

1. நிலம் வீடு கட்டும் பயன்பாட்டிற்கு (Residential use) மாற்றப்பட்டதா என்று உறுதி செய்ய.

2. சாலை, பூங்கா, பொது வசதிகள் (Road, Park, OSR – Open Space Reservation) இடம் விட்டு properly திட்டமிடப்பட்டதா என்று பார்க்க.

3. அந்த நிலம் அரசு புறம்போக்கு / குளம் / வழி நிலம் அல்ல என்பதை உறுதிப்படுத்த.

4. எதிர்காலத்தில் பதிவு / Patta / Bank Loan / Building Approval எல்லாவற்றுக்கும் DTCP approval layout அவசியம்.

DTCP Approval எப்படி கிடைக்கும்?

1. நிலம் உள்ள பகுதியின் Town Planning Office-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

2. தேவையான ஆவணங்கள்:

Mother Deed / Sale Deed

Patta, Chitta, Adangal

FMB Sketch, Village Map

EC (Encumbrance Certificate)

Proposed Layout Sketch

3. Town Planning அதிகாரிகள் சரிபார்த்து,

சாலை / OSR இடம் விட்டு,

நிலம் “Residential use” க்கு பொருத்தமா என்று பார்த்து,
DTCP Approval தருவார்கள். DTCP Approval இல்லாமல் வாங்கினால் என்ன பிரச்சனை?

அந்த Layout-க்கு Patta மாற்றம் / Sub Division / House Plan Approval தரமாட்டார்கள்.

Bank-கள் Housing Loan தரமாட்டார்கள்.

Corporation / Municipality-யில் Building Plan Approval தரமாட்டார்கள்.

Worst case → Revenue Department encroachment சொன்னால் இடித்து விடுவார்கள்.

DTCP vs CMDA vs LPA

DTCP → Tamil Nadu முழுக்க உள்ள ஊரக / சிறிய நகர Layout approval.

CMDA (Chennai Metropolitan Development Authority) → சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகள்.

LPA (Local Planning Authority) → Madurai, Trichy, Coimbatore போன்ற பெரிய நகரங்களுக்கு.

DTCP Approval = நிலம் சட்டப்படி Residential Layout ஆக அங்கீகரிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் மிக முக்கிய ஆவணம்.
👉 Approval உள்ள Layout-ல் தான் சொத்து பாதுகாப்பாக, Bank Loan-க்கு, Patta மாற்றம், வீடு கட்டும் அனுமதி கிடைக்கும்.

DTCP Approval பெறும் நடைமுறை

1️⃣ விண்ணப்பம் தயாரிப்பு

விண்ணப்பம் Developer / Owner / Power Agent தரவேண்டும்.

Form + Fees உடன் கீழ்க்கண்ட ஆவணங்கள் சேர்க்க வேண்டும்:

1. Title Deed (Sale Deed / Mother Deed) – உரிமை நிரூபிக்க.

2. Patta, Chitta, Adangal – Revenue records.

3. FMB Sketch + Village Map – நிலத்தின் அளவுகள்.

4. Encumbrance Certificate (EC) – குறைந்தது 30 ஆண்டுகள்.

5. Proposed Layout Sketch – Surveyor / Architect தயாரித்தது.

6. Topo Sketch – சுற்றுப்புற விவரங்கள்.

2️⃣ VAO / Tahsildar சான்று

அந்த நிலம் Poramboke / Waterbody / Government Land அல்ல என்று Tahsildar சான்று தர வேண்டும்.

Residential use க்கு மாற்றமா பார்க்கப்பட வேண்டும்.

3️⃣ பிளான் சமர்ப்பிப்பு

Layout Plan-ல்:

சாலைகள் (Road width 30ft, 40ft etc)

OSR Land (10% – Park / Common area)

Drainage, Water Supply space

Plot numbers
தெளிவாக காட்டப்பட வேண்டும்.

4️⃣ அலுவலக சோதனை

Concerned LPA (Local Planning Authority) / DTCP Office ஆய்வு செய்யும்.

Revenue Records + Field Inspection செய்வார்கள்.

சட்டப்படி எல்லாம் சரி இருந்தால் → Layout Approval பரிந்துரை செய்வார்கள்.

5️⃣ Approval & Numbering

Layoutக்கு DTCP Approval Order வரும்.

அதில்:

Approval Number

Date

Plots count

OSR land handing over details
இருக்கும்.

6️⃣ பின்னர் செய்யவேண்டியது

அந்த Approved Layout copy-ஐ Sub-Registrar Office-க்கு தர வேண்டும்.

அதன் பிறகு தான் அந்த Plots-க்கு Sale Deed Registration + Patta Transfer செய்ய முடியும்.

Bank-களும் Housing Loan கொடுக்க DTCP Approval பார்த்தே ஒப்புவிப்பார்கள்.

Processing Time & Fees

பொதுவாக 3 – 6 மாதங்கள் ஆகும்.

Fees → Layout அளவின்படி (per sq.metre) வசூலிக்கப்படும்.

OSR Land (10%) அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்.

1. ஆவணங்கள் சேகரிக்கவும் → Tahsildar சான்று பெறவும்.

2. Proper Layout Plan தயாரிக்கவும்.

3. DTCP Office-க்கு விண்ணப்பிக்கவும்.

4. ஆய்வு → Approval Order → Registration.

மா பேச்சி முத்து BA LLB
பத்திர பதிவு ஆலோசனை
சென்னை

19/06/2025

ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.

அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை "கீரை" ஆகின்றது

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "தழை".

நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் "தாள்" ஆகின்றன.

சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்குப் பெயர் "மடல்".

கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் "தட்டு" ஆகின்றன.

கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் "தோகை" (சோகை) என்றாகின்றன.

தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் "ஓலை" என்று சொல்லப்படுகின்றன.

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.

இதுவே தமிழின் சிறப்பு....

படித்ததில் பகிர்ந்தது

08/06/2025

நிலத்தை வைத்திருக்கும்
உரிமையாளர் ஒரு நிலத்தையோ,
அல்லது மனையையோ அளக்க
முற்படும் பொழுது பெரும்பாலும்
அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை...

குறிப்பாக நிலவரைபடம்
FMB பற்றி தெளிவாக
நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத
ஒரு புதிராகவே இருக்கிறது.
எனவே ஒரு நிலத்தை எப்படி
அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

• 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560

Address

Dindigul

Alerts

Be the first to know and let us send you an email when S chinnaraj Dindigul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S chinnaraj Dindigul:

Share