Athmanam Trust

Athmanam Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Athmanam Trust, 107 Pantheon Road, Chennai.

30/09/2018
19/03/2017

தேவிபாரதியின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் ஒன்றினை ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’ ஏற்பாடு செய்ய இருக்கிறது.

தேவிபாரதியின் வாசகர்கள் தொடர்பு கொள்ளவும்.

Email: [email protected]
Mobile: 96006 14472

கடைசி தேதி: 19-04-2017

17/03/2017

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை விருது - 2017

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை 2017ஆம் ஆண்டுக்கான ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’க்கு வரப்பெற்ற பரிந்துரைகள்.

டிசம்பர் 2013 -ல் இருந்து - 2014, 2015 - டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகள் குறித்த பரிந்துரைகளைப் பிரதியுடன் சேர்த்து அனுப்பும்படி கேட்டிருந்தோம். பிரதிகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 10, 2017 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க. மோகனரங்கன், கவிஞர் சுகுமாரன் ஆகியோர் நடுவர்களாகவும், கவிஞர் கலாப்ரியா நெறியாளராகவும் செயல்படுவார்கள் எனவும், மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்புகளுக்கான நடுவர்களாக ஆர். சிவக்குமார், ஜி. குப்புசாமி, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் நடுவர்களாகச் செயல்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தோம்.

விருதுக்கான பரிந்துரைகள் பிரதிகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 10, 2017 எனவும் அறிவித்திருந்தோம்.

தபாலில் அறக்கட்டளைக்குப் பரிந்துரைகள் வந்துசேர காலதாமதம் ஆனதால் 17-03-2017 வரையில் வந்து சேர்ந்த பிரதிகளின் முழுப் பட்டியலை இணைத்துள்ளோம்.

1. வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை - பேயோன்
2. திருச்சாழல் - கண்டராதித்தன்
3. நீர்ச்சாரி - பத்மபாரதி
4. குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் - ந. பெரியசாமி
5. ஆரஞ்சு மணக்கும் பசி - ஸ்டாலின் சரவணன்
6. அப்பாவின் வேட்டி - பொம்பூர் குமரேசன்
7. வாயாடிக் கவிதைகள் - பெருந்தேவி
8. அழுக்கு சாக்ஸ் - பெருந்தேவி
9. இக்கடல் இச்சுவை - பெருந்தேவி
10. ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - கீதா சுகுமாரன்
11. மகளுக்குச் சொன்ன கதை - சே. பிருந்தா
12. தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது - உமா தேவி
13. மண்டியிடா மானம் - ப. சுஜந்தன்
14. வேளிமலைப் பாணன் - ஜி. எஸ். தயாளன்
15. நடுக்கடல் மெளனம் - தேவேந்திரபூபதி
16. நீளா - பா. வெங்கடேசன்
17. எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை - ஒளவை
18. இன்னும் வராத சேதி - ஊர்வசி
19. இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் - கருணாகரன்
20. பெருங்கடல் போடுகிறேன் - அனார்
21. ஒவ்வா - ஸர்மிளா ஸெய்யித்
22. இளவரசி கவிதைகள் - ஆனந்த்
23. யாக்கையின் நீலம் - ப்ரேமா ரேவதி

மொழியாக்கக் கவிதைகள்

1. துயிலின் இரு நிலங்கள் - பிற மொழிக் கவிதைகள்,
தமிழில்: எஸ் சண்முகம்
2. அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிலா,
தமிழில்: அம்பை
3. எங்கே அந்தப் பாடல்கள்? - ஆப்பிரிக்கப் பெண் கவிதைகள்,
தமிழில்: ரவி
4. குவண்டனமோ கவிதைகள் - கைதிகளின் குரல்,
தமிழில்: மண்குதிரை
5. துயர் நடுவே வாழ்வு - திகார் பெண்களின் கண்ணீர் கவிதைகள்,
தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்

‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’ வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி இரண்டாம் பட்டியல்:

1. கருவிகளின் ஞாயிறு - - ராஜன் ஆத்தியப்பன்
2. நிலமெங்கும் வார்த்தைகள் - ரோஸ் ஆன்றோ
3. சாயல் எனப்படுவது யாதெனின் - விக்ரமாதித்யன்
4. அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் - வைதீஸ்வரன்
5. சிந்தை முட்கள் - நீல. பத்மநாபன்
6. வினோதமான பறவை - அழகியசிங்கர்
7. ஆகாயத் தோட்டிகள் - பூர்ணா
8. வைக்கோல் கன்று பசுவானது - பூர்ணா
9. இம்பர் உலகம் - ஞானக்கூத்தன்
10. நினைக்க முளைக்கும் சிறகுகள் - Dr. செல்வம் ரகு
11. எனது சட்டையில் இன்னொருவர் வாசனை - சூரியதாஸ்
12. கேட்பவரே - லக்ஷ்மி மணிவண்ணன்
13. மறுதாம்பு - தோழன் மபா
14. அடையாளம் தேடி - மு. வித்யா பெனோ
15. நிழலின் வாக்குமூலம் - பொன். வாசுதேவன்
16. உன்மத்தப் பித்தன் - பொன். வாசுதேவன்
17. லாகிரி - நரன்
18. உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள் - பாலைவன லாந்தர்
19. யக்கர் உடுக்குறி - கவின்

மொழியாக்கக் கவிதைகள்

1. இறுதி மணித்தியாலம் - சிங்கள மொழிக் கவிதைகள்
தமிழில்: எம். ரிஷான் ஷெரீஃப்

இங்கணம்:
வேல் கண்ணன்,
அறங்காவலர்,
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை,
சென்னை.

Mar 18 - 20178.30 AM to 8 PMAll are welcome
26/02/2017

Mar 18 - 2017

8.30 AM to 8 PM

All are welcome

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை நடத்தும் கவிஞர் சுகுமாரன் 60ஒருநாள் கருத்தரங்கம் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை மார்ச் 18, ...
22/02/2017

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை

நடத்தும்

கவிஞர் சுகுமாரன் 60

ஒருநாள் கருத்தரங்கம்

காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை
மார்ச் 18, 2017
இக்சா மையம்
எழும்பூர் - சென்னை
(கன்னிமரா நூலகம் எதிரில்)

அனைவரையும் அன்போடு அழைக்கிறது
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை

நிகழ்வு: 01

8. 55: வரவேற்புரை- வேல்கண்ணன்
9. 00: தலைமை உரை - பெருமாள்முருகன்
9.40: வெல்லிங்டன் நாவல் : அரவிந்தன் - தமிழ் இந்து

10.20: தேநீர் இடைவேளை

10.30: படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள் : ஆர். சிவக்குமார்
11.15: சுகுமாரனின் திரைப்பார்வை : யுவன் சந்திரசேகர்
11.55: சுகுமாரனின் இதழியல் தாக்கம் : அசோகன் - அந்திமழை

12.45: உணவு இடைவேளை

நிகழ்வு: 02

1.50: சுகுமாரனின் சிறுகதைகள் : விஷால் ராஜா, சந்திரா
2.30: சுகுமாரனின் கட்டுரைகள் - ஒரு விமர்சனப் பார்வை : கல்யாணராமன்
2.55: சுகுமாரன் - ஒரு தாக்கம் : இளங்கோ கிருஷ்ணன்
3.20: சுகுமாரன் - ஓர் அரசியல் பார்வை : மண்குதிரை

3.45: தேநீர் இடைவேளை

4.15: சுகுமாரன் பற்றி நண்பர்கள்
ஞாநி, பாஸ்கர் சக்தி, உமா சக்தி

5.15: தேநீர் இடைவேளை

நிகழ்வு: 03

5.30: சுகுமாரனின் கவிதை உலகம்
மோகனரங்கன், இசை, பரமேஸ்வரி திருநாவுக்கரசு
7.00 கருத்தரங்க நிறைவுரை - சமஸ்
7.45: நன்றியுரை: கிருஷ்ண பிரபு

அன்புடன் அழைக்கும்,
கார்த்திக் ராமானுஜம்,
அறங்காவலர்,
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை - சென்னை

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை விருது - 2017கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை 2017ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருதுக்கு பரிந...
17/02/2017

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை விருது - 2017

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை 2017ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருதுக்கு பரிந்துரைகளை வரவேற்கிறது.

டிசம்பர் 2013 -ல் இருந்து - 2014, 2015 - டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகள் குறித்த பரிந்துரைகளைப் பிரதியுடன் சேர்த்து அனுப்பும்படி கேட்டிருந்தோம். பிரதிகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 10, 2017 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க. மோகனரங்கன், கவிஞர் சுகுமாரன் ஆகியோர் நடுவர்களாகவும், கவிஞர் கலாப்ரியா நெறியாளராகவும் செயல்படுவார்கள்.

இதுவரை பரிந்துரைகள் வரப்பெற்ற பிரதிகளின் பட்டியலை இணைத்துள்ளோம்.

1. வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை - பேயோன்
2. திருச்சாழல் - கண்டராதித்தன்
3. நீர்ச்சாரி - பத்மபாரதி
4. குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் - ந. பெரியசாமி
5. ஆரஞ்சு மணக்கும் பசி - ஸ்டாலின் சரவணன்
6. அப்பாவின் வேட்டி - பொம்பூர் குமரேசன்
7. வாயாடிக் கவிதைகள் - பெருந்தேவி
8. அழுக்கு சாக்ஸ் - பெருந்தேவி
9. இக்கடல் இச்சுவை - பெருந்தேவி
10. ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - கீதா சுகுமாரன்
11. மகளுக்குச் சொன்ன கதை - சே. பிருந்தா
12. தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது - உமா தேவி
13. மண்டியிடா மானம் - ப. சுஜந்தன்
14. வேளிமலைப் பாணன் - ஜி. எஸ். தயாளன்
15. நடுக்கடல் மெளனம் - தேவேந்திரபூபதி
16. நீளா - பா. வெங்கடேசன்
17. எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை - ஒளவை
18. இன்னும் வராத சேதி - ஊர்வசி
19. இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் - கருணாகரன்
20. பெருங்கடல் போடுகிறேன் - அனார்
21. ஒவ்வா - ஸர்மிளா ஸெய்யித்
22. இளவரசி கவிதைகள் - ஆனந்த்
23. யாக்கையின் நீலம் - ப்ரேமா ரேவதி

மொழியாக்கக் கவிதைகள்

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை டிசம்பர் 2013-ல் இருந்து - 2014, 2015 - டிசம்பர் 2016 ஆம் ஆண்டுகளில் பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தொகுப்பிற்கு ரூபாய் 10,000/- உள்ளடக்கிய 'கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது'க்கு வரப்பெற்ற பிரதிகளின் பட்டியலை இணைத்துள்ளோம். பிரதிகள் அனுப்பவேண்டிய கடைசி தேதி மார்ச் 10 - 2017.

1. துயிலின் இரு நிலங்கள் - பிற மொழிக் கவிதைகள்,
தமிழில்: எஸ் சண்முகம்
2. அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிலா,
தமிழில்: அம்பை
3. எங்கே அந்தப் பாடல்கள்? - ஆப்பிரிக்கப் பெண் கவிதைகள்,
தமிழில்: ரவி
4. குவண்டனமோ கவிதைகள் - கைதிகளின் குரல்,
தமிழில்: மண்குதிரை
5. துயர் நடுவே வாழ்வு - திகார் பெண்களின் கண்ணீர் கவிதைகள்,
தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்

அனுப்ப வேண்டிய முகவரி :
கிருஷ்ண பிரபு,
எண்: 6, நிர்பாணி சுப்பாராவ் தெரு, LD வங்கி அருகில், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், 601 204
தொடர்புக்கு: வேல்கண்ணன் செல்பேசி: 9865887280

பரிந்துரைகளை அனுப்பக் கடைசி தேதி மார்ச் 10, 2017.

பரிந்துரைகளைப் பதிப்பாளர், வாசகர், மொழிப்பெயர்ப்பாளர் பரிந்துரைக்கலாம்.
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பு விருதுக்கான நடுவர்களாக மொழிபெயர்ப்பாளர் R. சிவகுமார், G. குப்புசாமி மற்றும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் செயல்படுவார்கள்.

இங்கணம்:
வேல் கண்ணன்,
அறங்காவலர்,
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை,
சென்னை.

16/09/2016
கவிஞர் ஆத்மாநாம் விருது - 2016தனது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்...
01/09/2016

கவிஞர் ஆத்மாநாம் விருது - 2016

தனது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம்.

கவிஞர் ஆத்மாநாம் நினைவைக் கொண்டாடும் வகையில் மெய்ப்பொருள் பதிப்பகம் 'ஆத்மாநாம் அறக்கட்டளை'யைக் கடந்த ஆண்டு துவங்கி கவிஞர் கலாப்ரியாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஆண்டு தோறும், கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.

சென்ற ஆண்டு (2015) கவிஞர். இசை அவர்களுக்குக் ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’ வழங்கப்பட்டது.

2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து
கவிஞர்.கலாப்ரியா (நெறியாளர்: தேர்வுக்குழு),கவிஞர்.சுகுமாரன், பேராசிரியர்.ஆர்.சிவகுமார், ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவின் முடிவுப்படி இந்த ஆண்டுக்கான, ரூ25000/- பரிசுத் தொகை அடங்கிய, கவிஞர். ஆத்மாநாம் விருது - மீகாமம் தொகுப்புக்காக - கவிஞர்.க.மோகனரங்கன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

பரிந்துரையாளர்கள், தேர்வுக்குழுவினர் ஆகியோருக்கு எங்கள் அன்பான நன்றி.

கவிஞர்.க.மோகனரங்கன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டுக்கான (2016) விருதுவிழா ஈரோட்டில் நடைபெறும்.

- ஆத்மாநாம் அறக்கட்டளை,
கவிஞர் வேல்கண்ணன்.

04/03/2016

சிறந்த கவிதை நூலுக்கு ஆத்மாநாம் அறக்கட்டளை வழங்கும்

2016-ஆம் ஆண்டுக்கான ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’-

நவீன தமிழ்க் கவிதைக்கு, பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும் பொழுது, தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை, கவிஞர் ஆத்மாநாம். தனது முன்னோடியான கவிதைகள், கட்டுரைகள் மற்றும் “ழ’’ இதழ் மூலமாகச் சிறப்பான பணியாற்றிய அவரது நினைவைக் கொண்டாடும் வகையில் ஆத்மாநாம் அறக்கட்டளை ஆண்டு தோறும், கவிஞர் ஆத்மாநாம் பெயரில் விருது வழங்கி வருகிறது.

25,000 ரூபாய் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அடங்கிய விருது தேர்ந்தெடுக்கப்படும் கவிஞருக்கு வழங்கப்படும். இந்த ஆண்டின் விருதுக்குரிய நூல் இதற்கு முந்தய மூன்றாண்டுகளில் ( 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகள் ) வெளியான நூல்களிலிருந்து நடுவர்களால் தெரிந்தெடுக்கப்படும். இதன் ஒருங்கிணைப்பாளராகக் கவிஞர் கலாப்ரியா செயல்படுவார். நூல்களை வாசகர்களும், சக படைப்பாளிகளும், பதிப்பகங்களும் பரிந்துரைக்கலாம்.

ஆத்மாநாம் அறக்கட்டளை
([email protected])

கவிஞர் இசைக்கு "ஆத்மாநாம் விருது" வழங்கிய நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு.
29/11/2015

கவிஞர் இசைக்கு "ஆத்மாநாம் விருது" வழங்கிய நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு.

All are welcome
13/11/2015

All are welcome

Address

107 Pantheon Road
Chennai
600008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Athmanam Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share